Breaking: வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய மணிஷ் காஷ்யப் பீகாரில் சரணடைந்தார்!!
"தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள்" என்ற போலி வீடியோவைப் பகிர்ந்ததாகக் கூறி பீகார் காவல்துறையால் தேடப்படும் யூடியூபர் மணிஷ் காஷ்யப், மேற்கு சம்பரான் மாவட்ட காவல் அதிகாரிகளிடம் இன்று (சனிக்கிழமை) சரணடைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையின் தொடர்ச்சியான அழுத்தத்தினாலும் மணிஷ், மேலும் சட்டச் சிக்கல்களில் சிக்காமல் இருக்க காவல்துறையில் சரணடைந்து இருப்பதாகத் தெரிகிறது. மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள மஜௌலியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஹ்னா தும்ரி கிராமத்திற்கு, பழைய வழக்கு ஒன்றில் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக போலீசார் வந்தனர்.
முன்னதாக அவரது ஜாமீன் மனுவை பாட்னா உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் மட்டும் அவர் மீது ஏழு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முன்னதாக பாட்னா நீதிமன்றம் இவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. மேற்கு சம்பரான் மாவட்டத்தில் மட்டும் இவர் மீது ஏழு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலி வீடியோக்களை பகிர்ந்து இருந்தார். இதையடுத்து இவர் மீதான பிடியை பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிகரித்தனர்.
வடமாநிலத்தவர்களை நேரில் சந்தித்து தைரியம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்; தொழிலாளர்கள் நெகிழ்ச்சி
ஏற்கனவே இவரது நான்கு வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். இந்த வங்கிக் கணக்குகளில் ரூ. 42 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
முதன் முறையாக போலி வீடியோக்கள் தொடர்பாக மணிஷ் காஷ்யப் மற்றும் நான்கு பேரின் மீது கடந்த மார்ச் 6ஆம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜமுய் என்ற இடத்தைச் சேர்ந்த அமன் குமாரை போலீசார் கைது செய்தனர்.
வட மாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது... டிஜிபி சைலேந்திர பாபு தகவல்!!
சமீபத்தில் பேட்டியளித்து இருந்த பீகார் ஏடிஜிபி ஜெ.எஸ். காங்க்வார், தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும் 30 போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும், இதையடுத்து பதற்றம் ஏற்பட்டதாகவும் கூறி இருந்தார்.
பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''தென்னிந்தியாவில் வடஇந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலி வீடியோ வெளியிட்டு இருந்த மணிஷ் காஷ்யப்பை பீகார் மற்றும் தமிழ்நாடு போலீசார் தேடி வந்தனர். அவர் இன்று சனிக்கிழமை, கைதுக்கும், அவரது சொத்து பறிமுதலுக்கும் பயந்து போலீசில் சரணடைந்தார்'' என்று தெரிவித்துள்ளது.
பீகார் முதல்வரை சந்தித்த டி.ஆர் பாலு… வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி குறித்து விளக்கம்!!
தமிழ்நாடு போலீசாரும் இதுதொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். துவக்கத்தில் பதற்றத்தை தவிர்க்கும் நோக்கத்திலும், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை நாட்டுக்கு எடுத்துக் காட்டவும், பீகாரில் இருந்து நான்கு அதிகாரிகள் தமிழ்நாடு வந்து இருந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். வடஇந்தியர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கியது என்றும் தெரிவித்து இருந்தனர்.
முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் அமன் குமார், ராகேஷ் திவாரி, யுவராஜ் சிங் ராஜ்புத் மற்றும் மணிஷ் காஷ்யப் ஆகியோர் அடங்குவர். இவர்களில் அமன் குமார், மணிஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.