வட மாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது... டிஜிபி சைலேந்திர பாபு தகவல்!!

வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

rumors posts about migrant workers had been deleted says  dgp sylendra babu

வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடமாநில தொழிலாளர்களிடம் நலன் சார்ந்து நிறை குறைகளை கேட்டறிந்தோம். பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர் பிரச்சனையில் சாதாரண நிலை திரும்ப உதவிய தொழில் துறையினர் மற்றும் காவல்துறைக்கு, பத்திரிகை துறையினருக்கு நன்றி. வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பதற்றம் தற்போது தணிந்துவிட்டது. இருந்தாலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இதையும் படிங்க: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? மார்ச்.11 அன்று சிறப்பு முகாம்... அறிவித்தது தமிழக அரசு!!

ஏனென்றால் தொடர்ந்து பொய்யான செய்திகளை ஒரு சிலர் பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறோம். புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய வதந்தி தொடர்பான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியது தொடர்பாக இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வதந்தி பரப்பிய முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வதந்தி என்பது மிகவும் ஆபத்தானது.

இதையும் படிங்க: குடும்ப பிரச்சினையில் நபர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

எந்த தவறும் செய்யாதோர் வதந்தியால் பாதிக்கப்பட்டுள்ளனர் வதந்தி பரப்பியவர்களை நிச்சயம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம். இதனால் பெருமளவு இந்த வதந்தி, வீடியோக்கள் குறைந்திருக்கிறது. இருந்தாலும் இந்த சூழ்நிலை அசாதாரண சூழ்நிலையாக இருப்பதால் தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களுடன் ஒரு உரையாடல் வைத்துக் கொள்ள வேண்டும் என தொழிலதிபர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios