ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? மார்ச்.11 அன்று சிறப்பு முகாம்... அறிவித்தது தமிழக அரசு!!

குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதற்கு சென்னையில் வரும் 11 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

tn govt announced that special camp for making correction in ration card

குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதற்கு சென்னையில் வரும் 11 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுக்குறித்து வெளியான அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 11.03.2023 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: அன்பு ஜோதி ஆசிரமவிவகாரம்... அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!!

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை விட எனது மனைவி ஆயிரம் மடங்கு பவரானவர்: அண்ணாமலை அதிரடி!!

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios