அன்பு ஜோதி ஆசிரமவிவகாரம்... அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!!

அன்பு ஜோதி ஆசிரமம் விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

national human rights commission ordered to file a report in anbu jothi ashram case

அன்பு ஜோதி ஆசிரமம் விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர்,  மாற்றுத்திறனாளிகள் பலர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவரை காணவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது உறவினர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸாரும், வருவாய்த்துறையினரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். அப்போது, ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் சட்டவிரோதமாக நடந்து வந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!!

இதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடத்தி வந்தது அம்பலமானது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க மகளிர் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் விழுப்புரம் அன்பு ஜோதி இல்லம் தொடர்பான விவகாரத்தில் நாளிதழ்களில் வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: விருதுநகரில் கோர விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய இருசக்கர வாகனம்: பெண் பலி

இந்த விவகாரத்தில், தமிழ்நாடு காவல்துறை தலைவர் 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவான பதிலளிக்க வேண்டும், இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்கியிருந்தால் அதுகுறித்த விவரங்களையும் வழங்க வேண்டும், மேலும் தமிழ்நாடு காவல்துறையினர் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட ஆசிரமத்திற்கு நேரில் சென்று விரிவான விசாரணை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நேர்மையான விசாரணையாக நடைபெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios