Asianet News TamilAsianet News Tamil

Modi BBC Documentary: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்பட சர்ச்சை என்ன? மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது?

பிரதமர் மோடி குறித்து பிபிசி(BBC) சேனல் தயாரித்துள்ள ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காலனித்துவ மனநிலையுடன் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

BBC documentary on PM Modi: India claims that is "propaganda" and exhibits a "colonial mindset."
Author
First Published Jan 20, 2023, 12:15 PM IST

பிரதமர் மோடி குறித்து பிபிசி(BBC) சேனல் தயாரித்துள்ள ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காலனி ஆதிக்க மனநிலையுடன் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான கலவரமும் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து தேசியஅளவிலும், சர்வதேச அளவிலும் கண்டனங்கள் எழுந்தன. முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள், போலீஸார் கலவரப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

71 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி வழங்கல் ஆணை!பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

BBC documentary on PM Modi: India claims that is "propaganda" and exhibits a "colonial mindset."

இந்நிலையில் பிபிசி சேனல், பிரதமர் மோடி குறித்து “ India:The Modi Question”  என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம் இரு பகுதிகளாக எடுக்கப்பட்டுள்ளது. முதல்பகுதி படம் கடந்த செவ்வாய்கிழமை வெளியானது. இந்த ஆவணப்படம் வெளியானதில் இருந்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கோத்ரா கலவரத்தில் சிறுபான்மையினர்களை பாதுகாக்க அப்போது இருந்த பாஜக அரசும், குஜராத் காவல் துறையும் தவறிவிட்டது என்று கோத்ரா கலவரம் குறித்து விசாரித்த பிரிட்டன் எம்.பி.க்கள் குழு இந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்படம் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியத் தொடர்ந்து உடனடியாக நீக்கப்பட்டது.
இந்த ஆவணப்படத்தை பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டன் எம்.பி. இம்ரான் ஹூசைன் எடுத்துள்ளார். 2022 கோத்ரா கலவரம் என்பது இன அழிப்பு என்று அவர் விமர்சித்துள்ளார்.

சிஆர்பிஎப் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு: புதிய வழிகாட்டி விதிகள் வெளியிட்டு எச்சரிக்கை

பிரிட்டனில் 20020ல் பிரதமராக இருந்த டோனி பிளேர் தலைமையில் இருந்த அமைச்சர்கள் குழு குஜராத் கலவரம் குறித்து தன்னிச்சையாக விசாரணை நடத்தியது. இந்த கலவரத்தில் இந்தியாவை பூர்வீமாகக் கொண்ட பிரிட்டன் வாழ் இந்தியர்கள் உயிரிழந்தனர் என்பதால் விசாரணை நடத்தப்பட்டது. 

இந்த ஆவணப்படத்தில் பிரிட்டன் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா கூறுகையில் “ குஜராத்தில் அப்போது முதல்வராக இருந்த மோடி மீது தீவிரமான குற்றச்சாட்டு இருக்கிறது. கலவரத்தை அடக்க போலீஸை அனுப்புவதில் தாமப்படுத்தி, தந்திரமாக இந்து தீவிரஅமைப்பினரை தூண்டிவிட்டுள்ளார்” எனக் குற்றம்சாட்டியுள்ளார். 

BBC documentary on PM Modi: India claims that is "propaganda" and exhibits a "colonial mindset."

இந்த கலவரம் 2022, பிப்ரவரி 28 முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடந்தபோது பிரிட்டனிலும்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தனித்தனியாக விசாரணையும் நடத்தின.

இந்நிலையில் இந்த ஆவணப்படம் கடந்த செவ்வாய்கிழமை பிபிசி யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்துக்கு ஒருதரப்பினர் ஆதரித்தாலும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆண்டபோது இந்தியர்களுக்கு ஏற்பட்ட துன்பம் குறித்து ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று சமூகவலைத்தளத்தில் பதிலடி கொடுத்ததனர். இதையடுத்து, யூடியூப் தளத்தில்இருந்து ஆவணப்படம் நீக்கப்பட்டது.

இந்த ஆவணப் படம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஆரிந்தம் பக்சி நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

இந்தியாவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை புனிதப்படுத்துவதை இந்தியஅதிகாரிகள் விரும்பவில்லை.

BBC documentary on PM Modi: India claims that is "propaganda" and exhibits a "colonial mindset."

பாரபட்சமாக, உண்மைத்தன்மை இல்லாமல், கண்ணியத்தன்மையற்று, முற்றிலும் காலனி ஆதிக்க மனோநிலையுடன் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தஆவணப்படம் தயாரித்த நிறுவனம் அல்லது தனிநபர்களையே பிரதிபலிக்கிறது.

யூடியூப்பில் ஆவணப்படம் பிபிசியால் பதிவேற்றப்படவில்லை. வழக்கமான நடைமுறைபோல் பிபிசியின் சட்டவிரோத பதிவேற்றங்களை அகற்றுவதற்கான நடைமுறையைப் பின்பற்றுவோம்”எ னத் தெரிவித்தார்
பிரி்ட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில் “ இந்தியாவுடனான பிரிட்டன் அரசின் நிலைப்பாடு தெளிவானது. நிலையானது, அதில் மாற்றம் ஏதும் இல்லை. நாங்கள் எங்கும் துன்புறுத்தலை பொறுக்கமாட்டோம்” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios