Asianet News TamilAsianet News Tamil

Pm Modi Rozgar Mela 2023: 71 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி வழங்கல் ஆணை!பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும், அமைப்புகளிலும் புதிதாக  பணியில்  அமர்த்தப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் வழங்க உள்ளார்.

PM Modi will hand out 71,000 employment letters to new government employees today.
Author
First Published Jan 20, 2023, 10:50 AM IST

மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும், அமைப்புகளிலும் புதிதாக  பணியில்  அமர்த்தப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி, புதிதாக பணி அமர்த்தப்பட்டவர்களிடம் கலந்துரையாடி உரையாற்ற உள்ளார். 10 லட்சம் பேருக்கு வேலைவழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து ரோஜ்கர் மேளா திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். இதன் படி ஏற்கெனவே நடத்தப்பட்ட ரோஜ்கர் மேளாவில் 71ஆயிரம் பேர்  புதிதாக அரசுப்பணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிஆர்பிஎப் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு: புதிய வழிகாட்டி விதிகள் வெளியிட்டு எச்சரிக்கை

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “ புதிய வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அதிகமான முன்னுரிமைதரப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தததைத் தொடர்ந்தது ரோஜ்கர் மேளா நடத்தப்படுகிறது. தேசிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகள், புதிய வேலைவாய்ப்புகளையும் இந்த ரோஜ்கர் மேளா வழங்கும்

ரயில்வேயில் இளநிலை பொறியாளர், லோகோ பைலட், தொழில்நுட்ப ஊழியர்கள், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், இளநிலை கணக்காளர், கிராமின் தக் சேவக், வருமானவரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூக பாதுகாப்பு அதிகாரி, பிஏ, எடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணியில் இணைந்தவர்களுக்கு இன்று பணி ஆணைகளை பிரதமர் மோடி வழங்கி தொடங்கி வைக்க உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயிர் சாப்பிடும் போட்டியில் புதிய சாதனை படைத்த முதியவர்!

இந்த நிகழ்ச்சியில் 45 அமைச்சர்கள் பங்கேற்று பணி ஆணைகளை பல்வேறு நகரங்களில் வழங்கஉள்ளனர். இதில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், ஹர்திப் பூரி, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios