CRPF: சிஆர்பிஎப் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு: புதிய வழிகாட்டி விதிகள் வெளியிட்டு எச்சரிக்கை
மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்கள் குறித்தோ, மதரீதியான கருத்துக்களையோ சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடாது என்று துணை ராணுவப் படையினருக்கு சிஆர்பிஎப் அமைப்பு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்கள் குறித்தோ, மதரீதியான கருத்துக்களையோ சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடாது என்று துணை ராணுவப் படையினருக்கு சிஆர்பிஎப் அமைப்பு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சர்சைக்குரிய மற்றும் அரசியல் விவகாரங்களில் எந்தவிதமான கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் தெரிவிக்க வேண்டாம், அது பிற்காலத்தில் கருத்துத் தெரிவித்த உங்களுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வீரர்களுக்கு சிஆர்பிஎப் எச்சரித்துள்ளது.
துணை ராணுவப் படையில் உள்ள வீரர்கள் சமூக வலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவற்றையெல்லாம் செய்யக்கூடாது, எந்தவிதமான கருத்துக்களை பதிவிடக்கூடாது என்பது குறித்து டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் தலைமை, விதிகளையும், புதிய கட்டுப்பாடுகளையும் வெளியிட்டுள்ளது. 2 பக்கங்களுக்கு புதிய விதிகளை சிஆர்பிஎப் வெளியிட்டுள்ளது.
Raghuram Rajan: Rahul: ராகுல் காந்தி ஒன்னும் ‘பப்பு’ அல்ல! ரகுராம் ராஜன் பாய்ச்சல்
இதில் குறிப்பாக, சிஆர்பிஎப் வீரர்கள் தங்கள் தனிப்பட்ட குறைகள், ஆதங்கங்கள், கருத்துக்களைக் கூட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால்கூட அது சிஆர்பிஎப் ஒழுக்கவிதிகள் 1964 மீறியதாகும். இதற்காக அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டி விதிகள் அனைத்தும் வீரர்கள் விழிப்புணர்வு ஊட்டுவதற்கும், சைபர் தாக்குதல் மற்றும் தொந்தரவுகளில் இருந்து எவ்வாறு தற்காத்துக்கொள்ளவும் விழிப்புணர்வுசெய்தியாகும்.
அது மட்டுமல்லாமல் சிஆர்பிஎப் வீரர்கள் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்ற பட்டியலும் வழிகாட்டி நெறிமுறைகளில் தரப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக முக்கியமான அமைச்சகங்கள், துறைகளில் பணியாற்றும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எங்கு பணியாற்றுகிறேன், எந்தத்துறையில் பணியாற்றுகிறேன் என்பதையும் சமூகவலைத்தளங்களில் வெளியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!
அதில் குறிப்பாக, “ சுயமாக எந்தவிதமான கருத்துக்களையும் உங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடாதீர்கள். இது அரசின் மரியாதைக்கு இழுக்கை ஏற்படுத்தும். அரசின் கொள்கைகள் அல்லது அரசியல்ரீதியான கருத்துக்கள், மதரீதியான கருத்துக்கள் ஆகியவற்றை எந்த பொதுவெளியிலும் தெரிவிக்காதீர்கள். சர்ச்சைக்குரியவிவகாரங்கள், உணர்ச்சிப்பூர்வ விஷயங்கள், அரசியல் விவகாரங்களில் சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கும் கருத்து பிற்காலத்தில் உங்களுக்கே ஆபத்தாக அமையும்” எனத் தெரிவித்துள்ளது.
சிஆர்பிஎப் வீரர்கள் மதுபோதையிலோ அல்லது கோபத்தில் இருக்கும்போதோ, அல்லது உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ எந்தவிதமான கருத்துக்களையும், யாரைப் பற்றியம், எந்த விஷயம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் தெரிவிக்க கூடாது.
அங்கீகரிக்கப்படாத தளத்தின் மூலம் எதையும் பகிர வேண்டாம், அது மனிதவள சிக்கல்கள், பதவி உயர்வு, உள்ளூர் ஆர்டர்கள் தீங்கற்றதாக இருந்தாலும்கூட, எதிரிகளுக்கு நுண்ணறிவு சேகரிப்பதில் வாய்ப்பளித்துவிடும் எனத் தெரிவித்துள்ளது.
அதேபோல சிஆர்பிஎப் வீரர்கள் எதைச் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உண்மை மற்றும் கருத்துக்களுக்கும் இடையே வேறுபாட்டை உறுதியாக தெரிந்திருக்க வேண்டும்.
அதாவது, “நீங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை சமூகவலைத் தளங்களில் தெளிவுபடுத்துவதை உறுதிசெய்யுங்கள். வலைப்பதிவுகள், விக்கி அல்லது வேறு எந்த தளத்திலும் அல்லது தனித்தளத்திலும் எந்த வடிவத்திலும் நீங்கள் வெளியிடும் கருத்துக்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
அனைத்து பல்கலை.களிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் , மகப்பேறு விடுப்பு... கேரள உயர்கல்வித்துறை உத்தரவு!!
சிஆர்பிஎப் வீரர்கள் எப்போதும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கருத்து தெரிவிக்க வேண்டும். சர்ச்சைக்குரிய, பாலின விவகாரங்கள், அரசியல்விவகாரங்களில் கருத்துத் தெரிவிக்கும்பது இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய நண்பர்களை சமூக வலைத்தளத்தில் சேர்க்கும்போது எச்சரிக்கையுடன் அவர்களின் பின்புலத்தை அறிந்து சேர்க்கவேண்டும்.
அலுவல்ரீதியான செய்திகள், விவகாரங்கள், தனிப்பட்ட பிரச்சினைகள் ஆகியவற்றை பேசுவதற்கும், ஆலோசிக்கவும் சமூகவலைத்தளங்கள் சரியான தளம் அல்ல. வீரர்கள் தங்களின் தனிப்பட்ட குறைகளை, அதற்குரிய அதிகாரிகளுக்கான தளங்களில் தெரிவிக்க உரிமை உண்டு
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது