Asianet News TamilAsianet News Tamil

பாபர் மசூதி இடிப்பு வழக்கு…லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி, ஜோஷி இன்று ஆஜர்…  குற்றச்சாட்டு பதிவு..

Babri Masjit domolision case... Advani and Joshi aajar
Babri Masjit domolision case... Advani  and Joshi aajar
Author
First Published May 30, 2017, 11:52 AM IST


பாபர் மசூதி இடிப்பு வழக்கு…லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி, ஜோஷி இன்று ஆஜர்…  குற்றச்சாட்டு பதிவு..

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை லக்னோவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் இன்று நடைபெறுகிறது. இன்று குற்றசாட்டுக்கள் பதிவு செய்யப்படவுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கரசேவகர்களுக்கு எதிராக லக்னோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி, முன்னாள் உத்தரபிரதேச முதலமைச்சரும்  ராஜஸ்தான் மாநில கவர்னருமான கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது ரேபரேலி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோரை கடந்த 2001-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு விடுவித்தது.

இதை எதிர்த்து சிபிஐ  சார்பில் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் , அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் ஒரு சம்பவத்தில் இருவேறு கோர்ட்டுகளில் விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் , அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கையும் லக்னோ சிறப்பு நீதிமன்றத்துக்கு  மாற்றி கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டனர்.

Babri Masjit domolision case... Advani  and Joshi aajar


மேலும் இந்த வழக்கில் ஒரு மாதத்துக்குள் விசாரணையை தொடங்கி 2 ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. மேலும் இன்று அவர்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் லக்னோ கோர்ட்டில் எல்.கே.அத்வானி மத்திய அமைச்சர் உமா பாரதி, மற்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரும் ஆஜராக உள்ளனர். இதற்காக அவர்கள் டெல்லியில் இருந்தது லக்னோ புறப்பட்டுச் சென்றனர்.

இன்று அவர்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளது.

  
Follow Us:
Download App:
  • android
  • ios