15 கிலோ தங்கம்.. 18,000 வைரம், மரகத கற்கள்.. அயோத்தி பால ராமர் சிலையை அலங்கரிக்கும் நகைகள் பற்றி தெரியுமா?
அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு எவ்வளவு நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்புவிழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றதும். கோயில் கருவறையில் வைக்கப்பட்டிருந்த 51 அடி குழந்தை ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த முக்கிய நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து பல விவிஐபிக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு எவ்வளவு நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த பால ராமர் சிலையில் சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் 18,000 வைரங்கள் மற்றும் மரகதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரபலமான கைவினைஞர்கள், அத்யாத்மா ராமாயணம், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் போன்ற புனித நூல்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு பகுதியையும் நுட்பமாக வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கூறிய புனித நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி நகைகளை நேர்த்தியாக வடிவமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 நகைகள்
ஒரு திலகம், ஒரு கிரீடம், நான்கு நெக்லஸ்கள், ஒரு இடுப்புப் பட்டை, இரண்டு ஜோடி கொலுசுகள், ஆரம், இரண்டு மோதிரங்கள் என மொத்தம் 14 நகைகள் 12 நாட்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ராமர் சிலைக்கு தயாரிக்கும் பொறுப்பு லக்னோவின் ஹர்சஹய்மல் ஷியாம்லால் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கிரீடம்
ராமர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள சிலை ஐந்து வயது சிறுவனான குழந்தை ராமர் என்பதால், சிலையின் கிரீடத்தை போலவே நேரத்தியாக தயாரிக்கப்பட்டுள்ளது. 5, வயது குழந்தைக்கு ஏற்ற கிரீடம் வேண்டும் என்று ராமர் கோயில் அறக்கட்டளை கேட்டுக்கொண்டதால் இந்த கிரீடம் குழந்தை ராமர் சிலைக்கு ஏற்றவாறு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.
22 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட கிரீடம் 75 காரட் வைரங்கள், 175 காரட் ஜாம்பியன் மரகதங்கள் மற்றும் 262 காரட் மாணிக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது 1.7 கிலோ எடை கொண்ட இந்த கிரீடம், ராமரின் சூர்யவன்ஷி பரம்பரையைக் குறிக்கும் சூரிய பகவானின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது, மேலும் தூய்மையைக் குறிக்கும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திலகம்
ராமர் சிலையின் நெற்றியில் வைக்கப்பட்டுள்ள திலகத்தின் மையத்தில் மூன்று காரட் வைரங்களுடன் 16 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இருபுறமும் 10 காரட் வைரங்கள் மற்றும் ரூபி கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நெக்லஸ்
பால ராமர் சிலைக்கு பல தங்க நெக்லஸ்கள்அணிவிக்கப்பட்டுள்ள மேலும் ராமர் சிலையின் கழுத்தில் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட பிறை வடிவ நெக்லஸ் உள்ளது. மலர் வடிவங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த நெக்லஸ் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. தங்கத்தால் வடிவமைக்கப்பட்டு, வைரம், மாணிக்கங்கள் மற்றும் மரகதங்களால் பதிக்கப்பட்ட இந்த நெக்லஸ் தெய்வீக மகிமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பெரிய மாணிக்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட கௌஸ்துப மணியும் ராமர் சிலையை அலங்கரித்துள்ளது. மேலும் கர்தானி என்று அழைக்கப்படும் தங்கத்தால் செய்யப்பட்ட இடுப்புப் பட்டையில் மாணிக்கங்கள், முத்துக்கள் மற்றும் வைரங்கள் மற்றும் மரகதம் போன்ற ரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளது. 750 கிராம் எடை கொண்ட இந்த கர்தானி என்ற அணிகலன் அரச மற்றும் தெய்வீக அருளின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பழங்கால நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அதிக நன்கொடை கொடுத்தவர்கள் இவர்கள்தான்; அதானி, அம்பானி இல்லை!!
ராமர் சிலை மீதுவிஜயமாலா என்று அழைக்கப்படும் மிக நீளமான நெக்லஸ் உள்ளது. வெற்றியின் அடையாளமாக அணிந்திருக்கும் இது வைஷ்ணவ பாரம்பரியத்தின் சின்னங்களை சித்தரிக்கிறது இந்த நெக்லஸில் கமல், குந்த், பாரிஜாதம், சம்பா மற்றும் துளசி ஆகிய 5 புனித மலர்கள் பதிக்கப்பட்டுள்ளது. இது ராமரின் கால்கள் வரையும் நீண்டு அலங்கரிக்கிறது. மேலும் தங்கத்தால் ஆன காப்பு, கவசங்கள் சிலையை அலங்கரிக்கின்றன.
பால ராமரின் இடது கையில், முத்து, மாணிக்கங்கள் மற்றும் மரகதங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தங்க வில் உள்ளது, தங்க அம்பு ஒன்றையும் ராமர் ஏந்தியிருக்கிறார்.