அயோத்தி வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடியாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 

தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் அயோத்தி வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வரும் 13-ம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு வெளியாகும் தினத்தன்று நாட்டில் கலவரங்கள் அல்லது அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க;- திகார் சிறையில் கர்ஜிக்கும் ப.சிதம்பரம்... மத்திய அரசை நார் நாராய் கிழித்து விமர்சனம்..!

ஆகையால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி, கோராக்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் டிசம்பர் 10-ம் தேதி வரை, போலீசார் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என, தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அயோத்தி வழக்கு தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் யாரும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிக்கக்கூடாது என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டத்தின்போது, தமது அமைச்சரவை சகாக்களுக்கு பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க;- ஆண் நண்பர் கண்முன்னே இளம்பெண் கதற கதற கூட்டு பாலியல் பலாத்காரம்... வீடியோ வெளியானதால் அதிர்ச்சி..!

இந்நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளதால் சட்டம் -ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் கண்காணிக்காவும், உளவுத்துறை கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்கவும் உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.