Asianet News TamilAsianet News Tamil

திகார் சிறையில் கர்ஜிக்கும் ப.சிதம்பரம்... மத்திய அரசை நார் நாராய் கிழித்து விமர்சனம்..!

அக்டோபா் 26-ம் தேதி வெளியாகியுள்ள 'எகனாமிஸ்ட்' பத்திரிகையை அனைவரும் படிக்க வேண்டும். அதன் தலையங்கத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் திறமையாகக் கையாளப்படவில்லை, பொருளாதார செயல்பாடுகள் மோசமாகி வருகின்றன என்றே அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது நாட்டின் பொருளாதாரம் திறமையற்றவா்களின் கைகளில் சிக்கி மோசமடைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

Indian economy...Chidambaram roars in Tihar jail
Author
Tamil Nadu, First Published Nov 5, 2019, 12:36 PM IST

தகுதி இல்லாதவர்கள் கைகளில் நாட்டின் பொருளாதாரம் சிக்கி தவிக்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்ட் 21-ம் தேதி அதிரடியாக கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அமலாக்கத்துறை அதே வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவர் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

Indian economy...Chidambaram roars in Tihar jail

இதனிடையே, நாட்டின் பொருளாதாரம் நிலைமை குறித்து ப.சிதம்பரம் தனது குடும்பத்தினர் மூலம் அவ்வப்போது மத்திய அரசை விமர்சித்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் 'எகனாமிஸ்ட்' பத்திரிகையில் வெளியாகியுள்ள தலையங்கத்தைச் சுட்டிக்காட்டி டுவிட்டர் மூலம் மத்திய அரசை சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

அதில், அக்டோபா் 26-ம் தேதி வெளியாகியுள்ள 'எகனாமிஸ்ட்' பத்திரிகையை அனைவரும் படிக்க வேண்டும். அதன் தலையங்கத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் திறமையாகக் கையாளப்படவில்லை, பொருளாதார செயல்பாடுகள் மோசமாகி வருகின்றன என்றே அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது நாட்டின் பொருளாதாரம் திறமையற்றவா்களின் கைகளில் சிக்கி மோசமடைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

Indian economy...Chidambaram roars in Tihar jail

அண்மையில், நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அபிஜித் பானர்ஜி, இந்தியப் பொருளாதாரம் மோசமாகவே உள்ளது என்ற உண்மையை வெளிப்படையாகக் கூறினார். மத்திய அரசு உண்மையாகவே நேர்மையாக செயல்படுவதென்றால் அவா் கூறியதைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், அபிஜித் பானர்ஜியை மோசமாக விமர்சித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios