உறவினரை மரத்தில் கட்டி வைத்துவிட்டு அவருடன் வந்த இளம்பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம், சித்ரகூட் மாவட்டம், மவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண், தனது குடும்பத்தைச் சேர்ந்த ஆண் நண்பருடன் உறவினர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, இருவரையும் 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். பின்னர், அந்த இளைஞரை அடித்து உதைத்து மரத்தில் கட்டி வைத்தனர். 

இதனையடுத்து, அவர் கண்முன்னே அந்த இளம்பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் கதறகதற பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுதொடா்பாக, 14 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதுபற்றி வெளியே சொல்லாமல் இருந்த அந்த பெண் வீடியோ விவகாரம் வெளியானதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். 

ஆனால், அதை வாங்க போலீசார் அதனை ஏற்க மறுத்து விட்டதாகவும், வீடியோ பதிவு வேகமாக பரவியதையடுத்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தப்பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 6 போ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.