ராஜஸ்தான் உணவகத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட சண்டை தொடர்பாக ஐ,ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட சண்டையில் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்த சண்டை, உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அங்கிருந்தவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக அடிப்பதையும் கற்களை வீசிக்கொள்வதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அஜ்மீர் மேம்பாட்டு ஆணைய ஆணையர் கிரிதர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சுஷில் குமார் பிஷ்னோய் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிறப்புப் பணி அதிகாரியாக (கங்காபூர் நகர போலீஸ்) நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் போலீசார் விரிவான விசாரணை நடத்தி வரும் நிலையில் ஒரு காவலர் மற்றும் இரண்டு அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழந்தததால் அதிர்ச்சி.. 15 கிராமங்கள் பாதிப்பு..
ஐபிஎஸ் அதிகாரியின் புதிய பதவியை கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஃபேர்வெல் விருந்தில் இருந்து அதிகாரிகள் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. கழிவறை பயன்படுத்துவதற்காக அவர்கள் உணவகத்திற்கு வெளியே நிறுத்தினர். ஊழியர்களை திறக்கச் சொன்னதால், வாக்குவாதம் ஏற்பட்டது. உணவக ஊழியர் ஒருவரை ஐபிஎஸ் அதிகாரி அறைந்ததாகவும் அதன் பின்னரே இந்த பிரச்சனை தொடங்கியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உணவக ஊழியர்கள் சண்டையிட்டதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
அந்த அதிகாரி சில போலீசாருடன் திரும்பி வந்து ஊழியர்களை தாக்கியதாக உணவக உரிமையாளர் புகார் அளித்துள்ளார். உணவக உரிமையாளரின் புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் காவல்துறை தலைவர் உமேஷ் மிஸ்ரா பேசிய போது, இந்த விவகாரம் குறித்து விஜிலென்ஸ் துறை விசாரித்து வருகிறது.” என்று தெரிவித்தார். எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஐபிஎஸ் அதிகாரி பிஷ்னோய் நிராகரித்துள்ளார்.
ஆந்திராவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. பல ரயில்கள் ரத்து..
