குஜராத்தின் தபி மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் சுமார் 15 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன
குஜராத்தின் வியாராவில் மின்தோலா ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இன்று இடிந்து விழுந்தது. பாலம் இடிந்ததால் சுமார் 15 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட இந்த பாலம், திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செயல் பொறியாளர் நிரவ் ரத்தோட் இதுகுறித்து பேசிய போது, "ரூ. 2 கோடி செலவு மதிப்பில் 2021-ம் ஆண்டு பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை கண்டறிய நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக இதே போன்றொரு சம்பவம் கடந்த 4-ம் தேதி பீகாரில் நடந்தது. கங்கா ஆற்றின் மீது அகுவானி-சுல்தங்கஞ்ச் பாலம் என்று அழைக்கப்படும் கட்டுமானப் பாலம், பாகல்பூர் மாவட்டத்தில் இடிந்து விழுந்தது. இந்த பாலம் பாகல்பூரையும் ககாரியாவையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டது. இடிபாடுகளுக்கு ஒரு நாள் கழித்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மணிப்பூரில் மீண்டும் கலவரம்; 9 பேர் உயிரிழப்பு; விடுப்பில் இருக்கும் போலீசாருக்கு அழைப்பு!
இச்சம்பவம் நடந்த உடனேயே, சாலை கட்டுமானத் துறையின் இலாகாவை வைத்திருக்கும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாக கட்டுமானத்தில் உள்ள பாலத்தை இடிக்க மாநில அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறினார்.
"இந்த பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி இடிந்து விழுந்தது. அதன்பிறகு, கட்டுமான விஷயங்களில் நிபுணத்துவம் பெற்ற ஐஐடி-ரூர்க்கியை அணுகி ஆய்வு நடத்தினோம். இன்னும் இறுதி அறிக்கை வரவில்லை. கட்டமைப்பை ஆய்வு செய்த வல்லுநர்கள் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக எங்களுக்குத் தெரிவித்தனர்" என்று யாதவ் கூறினார்.
மேலும் பீகார் பாலம் விபத்து தொடர்பாக ஹரியானாவை தளமாகக் கொண்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. . மேலும் பணியின் தரத்தை கண்காணிக்க தவறியதற்காக சம்பந்தப்பட்ட நிர்வாக பொறியாளரையும் துறை சஸ்பெண்ட் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. பல ரயில்கள் ரத்து..
