Asianet News TamilAsianet News Tamil

ஆசியாவின் பணக்கார கிராமம் : சீனா, ஜப்பானில் இல்லை; இந்தியாவில் தான் உள்ளது!

குஜராத்தில் அமைந்துள்ள மாதப்பூர் கிராமம், அதன் மக்களின் அசாதாரண செல்வத்திற்காக அறியப்படுகிறது. கிராமத்தின் செழிப்புக்கு அதன் பெரும்பாலான மக்கள் வெளிநாட்டில் வசித்து, கிராமத்தில் நிலையான முதலீடுகளைச் செய்வதே காரணமாகும்.

Asia s richest village is in India Not in China or Japan Rya
Author
First Published Aug 23, 2024, 12:37 PM IST | Last Updated Aug 23, 2024, 12:43 PM IST

கிராமம் என்று சொன்னாலே சேறும் சகதியுமான சாலைகள், அடி பம்பு, மாட்டு வண்டிகள், மின்சாரம் இல்லாத களிமண் வீடுகள், வயல்களில் வேலை செய்யும் விவசாயக் கூலிகள் போன்ற படங்கள்தான் நம் மனதில் தோன்றும். இன்று காலங்கள் மாறி, வசதி வாய்ப்புகள் பெருகி விட்ட நிலையில் கிராமங்கள் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளன. மேலும் அரசின் வளர்ச்சித் திட்டங்களால் நாடு முழுவதும் உள்ள கிராமங்களும் செழிப்பை நோக்கி முன்னேறி வருகின்றன. சரி, ஆசியாவின் பணக்கார கிராமம் சீனா, ஜப்பான் அல்லது தென் கொரியாவில் இல்லை; அது நம் நாட்டில் உள்ளது. குஜராத்தின் பூஜில் உள்ள ஒரு கிராமம், இந்திய கிராமங்களைப் பற்றிய உங்கள் பார்வையை முற்றிலும் மாற்றும்.

ஆசியாவின் பணக்கார கிராமம் என்று அழைக்கப்படும் மாதப்பூர், குஜராத்தின் பூஜ் நகரின் புறநகரில் உள்ளது. இங்கு சுமார் 32,000 பேர் வசிக்கின்றன. மேலும் இந்த மக்கள் ரூ.7,000 கோடி மதிப்புள்ள நிலையான வைப்புத்தொகையை வைத்திருப்பதாக பெருமையாக கூறுகின்றனர். இந்த கிராமத்தின் செழிப்புக்கு அதன் 65% NRI (குடியிருப்பு இல்லாத இந்தியர்) மக்கள்தொகை காரணமாக உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை உள்ளூர் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்கிறார்கள். இதன் மூலம் இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் உறவினர் அனுப்பும் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

நாட்டிலேயே அதிக மது குடிக்கும் பெண்கள் உள்ள ஊர் எது தெரியுமா? லிஸ்ட்ல தமிழ்நாடு எந்த இடம்?

மாதப்பூரில் தோராயமாக 20,000 பேர் படேல் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் HDFC வங்கி, SBI, PNB, Axis Bank, ICICI வங்கி மற்றும் யூனியன் வங்கி உட்பட 17 வங்கிகள் உள்ளன. இந்த கிராமத்தில் பல பொது மற்றும் தனியார் வங்கிகள் தங்கள் கிளைகளை திறக்க ஆர்வமாக உள்ளன.

இந்த கிராமத்தின் செழிப்புக்கு கட்டுமானத் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் என்ஆர்ஐ குடும்பங்களின் குறிப்பிடத்தக்க வைப்புத்தொகை முதன்மையானது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலும் வசிக்கின்றனர். வெளிநாட்டில் வசித்தாலும், இந்த மக்கள் இன்னும் தங்கள் சொந்தங்களுடன் இணைந்துள்ளனர். தங்கள் கிராமத்தில் முழுமையான மாற்றங்களை கொண்டு வருகிறார்கள்."

இந்த கிராமத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை மேலாளர் இதுகுறித்து பேசிய போது “ மிகப்பெரிய டெபாசிட்கள் இந்த கிராமத்தை செழுமையாக்கியுள்ளன. தண்ணீர், சுகாதாரம் மற்றும் சாலைகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ளது. பங்களாக்கள், பொது மற்றும் தனியார் பள்ளிகள், ஏரிகள் மற்றும் கோவில்கள் உள்ளன," என்று தெரிவித்தார்.

தானே நகரும் கற்கள் முதல்.. ரத்த நீர்வீழ்ச்சி வரை - வியக்க வைக்கும் இயற்கையின் 4 அதிசயங்கள்!

மாதப்பூரில் கிட்டத்தட்ட 20,000 வீடுகள் உள்ளன, தோராயமாக 1,200 குடும்பங்கள் வெளிநாட்டில் வசிக்கின்றன. தொடர்ந்து பணம் அனுப்புவதால், கிராமத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், அணைகள், கோவில்கள், ஏரிகள் போன்றவற்றை அவர்களால் மேம்படுத்த முடிந்தது. தங்கள் சொந்த ஊருடன் தங்களை இணைத்துக் கொள்ளவும், வெளிநாட்டில் தங்கள் கிராமத்தின் இமேஜை மேம்படுத்தவும் எண்ணி, லண்டனில் மாதப்பூர் கிராம சங்கத்தையும் நிறுவியுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios