தானே நகரும் கற்கள் முதல்.. ரத்த நீர்வீழ்ச்சி வரை - வியக்க வைக்கும் இயற்கையின் 4 அதிசயங்கள்!
Weird Phenomenon in World : இந்த உலகம் பல விசித்திரமான சம்பவங்களின் கோர்வை தான், என்னதான் அறிவியல் வளர்ச்சி கண்டாலும் இன்னும் விடை தெரியா மர்மங்கள் பல உள்ளன.
Sailing Stones
நகரும் கற்கள்
உலகின் சில பகுதிகளில் இந்த நகரும் கற்கள் காணப்படுகிறது, இது இந்த உலகில் நடைபெறும் புவியியல் நிகழ்வின் ஒரு பகுதியாகும். யாருடைய தலையீடும் இல்லாமல், மென்மையான பள்ளத்தாக்குகளின் தரையில் உள்ள பாறைகள் மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டே இருக்கின்றன.
ஏன் கற்கள் நகர்கிறது?
குளிர்காலதில் உறைந்த குளத்தில் மிதக்கும் சில மில்லிமீட்டர் தடிமன் கொண்ட பெரிய பனிக்கட்டிகள், காலை வெயிலில் லேசாக உடைக்கத் தொடங்கும் போது இந்த கற்கள் நகர்வதாக கூறப்படுகிறது. இந்த மெல்லிய மிதக்கும் பனிக்கட்டிகள் லேசான காற்றால் இயக்கப்படுகின்றன அப்போது தான் மணிக்கு 0.3 கிலோமீட்டர் வேகத்தில் இந்த கற்கள் தள்ளப்படுகின்றன என்று அறிவியல் கூறுகிறது.
Unknown Fact of Abroad Study | வெளிநாட்டில் படிப்பு பணம் இருந்தால் மட்டுமா?
Darvasa
நரகத்தின் நுழைவு வாயில் (தர்வாசா)
துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள இடம் தான் தர்வாசா, கடந்த 1960ம் ஆண்டு இங்கு எண்ணெய் மற்றும் பிற தாதுக்களை தேடி அந்நாட்டின் பல பகுதிகளில் பெரும் துளைகள் தோண்டப்பட்டது. அப்பொழுது ஒரு இடத்தில் நச்சுத்தன்மையான வாயுக்கள் வெளிவருவதை கண்ட பொறியாளர்கள், அந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டு சென்றனர்.
இந்நிலையில் கடந்த 1980ம் ஆண்டு மீண்டும் அங்கு பணிகள் தொடங்கிய பொழுது, பூமியிலிருந்து வெளிவரும் அந்த வாயு பிரச்சனைகளை தர, அந்த வாயுக்களை தீயிட்டு முற்றிக்கும் அழிக்க முடிவுசெய்யப்பட்டது. ஆனால் கடந்த 45 ஆண்டுகளும் மேலாக அந்த தீ இன்னும் அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்து வருகின்றது. மக்கள் இப்பொது அதை நேரில் சென்று பார்வையிடவும் முடியும். உள்ளூர் மக்கள் இதை நரகத்தின் வாயில் என்று அழைக்கின்றனர்.
Northern Lights
அரோரா பொரியாலிஸ்
ஆர்டிக் பகுதிகளில் மட்டுமே வானில் தோன்றும் ஒரு அதிசய நிகழ்வு இது. ரஷ்யா மற்றும் ஆர்டிக் வட்டத்தில் இருக்கும் வெகு சில இடங்களில் மட்டுமே இதை வானில் பார்க்கமுடியும். அதுவும் குளிர்காலம் முடியப்போகும் நேரத்தில் மட்டுமே இது தோன்றுமாம். இந்த அதிசய நிகழ்வை காண ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்டிக் வட்டத்தை நோக்கி சுற்றுலா சென்று வருகின்றனர்.
பூமியின் காந்தப்புலம், துருவங்களை நோக்கி சில துகள்களை திருப்பி விடுவதால் தான் இந்த நிகழ்வு வானில் தோன்றுவதாக கூறப்படுகிறது. இதை Northern Lights என்றும் அழைப்பார்கள்.
Blood Falls
ரத்த நீர்வீழ்ச்சி
அண்டார்டிகா பகுதிகளில் நிகழும் ஒரு கடல்சார் அதிசய நிகழ்வு தான் இந்த Blood Falls, அண்டார்டிகா பகுதியில் ஒரு சில இடங்களில் பாறைகளில் இருந்து வழியும் நீர் ரத்த சிவப்பில் வழிந்தோடும், அதை தான் ரத்த நீர்வீழ்ச்சி என்கிறார்கள். அதாவது பனி அடுக்குகளில் உள்ள சிறிய பிளவுகளில் இருந்து, இரும்புச்சத்து நிறைந்த "ஹைப்பர்சலைன்" நீர் அவ்வப்போது வெளிப்படுகிறது.
கடலில் உள்ள உப்பு நீரோடு அந்த அதிக இரும்பு சத்துள்ள நீர் கலக்கும்போது தான் இந்த நிறம் ஏற்படுகிறது. 1911ம் ஆண்டு ஆஸ்திரேலிய புவியியலாளர் தாமஸ் கிரிஃபித் டெய்லரால் தான் இந்த சிவப்பு நிற நீர்வீழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அங்கு சிவப்பு நிற பாசிகள் இருப்பதாகவும், அவை தான் அந்த நிறத்தை அளிப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், பல ஆய்வுகளுக்கு பிறகு தான் அது இரும்பு ஆக்சைடுகளின் காரணமாக ஏற்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டது.
ரோடும் இல்ல, தண்டவாளமும் இல்ல; ஆனாலும் உலகின் 12வது பெரிய நாடு பற்றி தெரியுமா?