Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி டிகிரி படித்தாரா.? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம் - எதற்கு தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி சான்றிதழை அளிக்க தேவையில்லை என குஜராத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

Arvind Kejriwal fined Rs 25k as Gujarat HC junks CIC's PM Modi degree order
Author
First Published Apr 1, 2023, 11:51 AM IST

பிரதமர் மோடியின் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டங்களின் விவரங்களை வழங்குமாறு பிரதமர் அலுவலகத்தின் பொது தகவல் அதிகாரி (PIO) மற்றும் குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் PIOகளுக்கு தலைமை தகவல் ஆணையத்தின் (CIC) உத்தரவை நீதிபதி பிரேன் வைஷ்ணவ் அடங்கிய ஒற்றை நீதிபதி பெஞ்ச் ரத்து செய்தது. 

பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ரூ. 25,000 கட்டணமாக விதித்தது. தலைமை தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

Arvind Kejriwal fined Rs 25k as Gujarat HC junks CIC's PM Modi degree order

இதையும் படிங்க..Gold Rate Today : வரலாற்றில் காணாத விலையை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

அதில், “ஜனநாயகத்தில், பதவியில் இருப்பவர் முனைவர் பட்டம் பெற்றவராகவோ அல்லது படிப்பறிவில்லாதவராகவோ இருந்தால் வித்தியாசம் இருக்காது. மேலும், இந்த விவகாரத்தில் பொதுமக்கள் நலன் எதுவும் இல்லை. அவரது தனியுரிமை கூட பாதிக்கப்படுகிறது” என்று வாதிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுப்படி, அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் 1978 இல் பட்டப்படிப்பை முடித்தார், 1983 இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

Arvind Kejriwal fined Rs 25k as Gujarat HC junks CIC's PM Modi degree order

மறுபுறம், கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் பெர்சி கவினா வாதிடுகையில், "தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவைப் பார்த்தால், அதில் அவரது கல்வித் தகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நாங்கள் பட்டச் சான்றிதழைக் கேட்கிறோம். அவருடைய மதிப்பெண் பட்டியலைக் கேட்கவில்லை" என்று வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா

இதையும் படிங்க..60 பவுன் கிடையாது.. மொத்தம் 200 பவுன் காணோம்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழக்கில் புது ட்விஸ்ட்

Follow Us:
Download App:
  • android
  • ios