இந்தி திணிப்புக்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பிரமாண்ட பேரணியில் தமிழகத்தின் தலைவர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர்.
இந்தி திணிப்புக்கு எதிராகமேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பிரமாண்ட பேரணியில் தமிழகத்தின் தலைவர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியை திணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளித்துள்ள 16வது அறிக்கையில், இந்தியை கட்டாய படுத்துவதற்கான பரிந்துரைகள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது, இந்தி பேசாத மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சியை தமிழகம், கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்த வரிசையில் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி புதன்கிழமை மேற்கு வங்க மாநிலத்தில் ஏராளமான வங்க மக்கள் திரண்டு இந்தி மொழிக்கு எதிராக பேரணி நடத்தினர். "பங்களா போக்கோ" என்ற வங்காளிகளின் தேசிய அமைப்பு இந்த பேரணியை ஒருங்கிணைத்தது.
அப்போது மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் அனைத்து துறைகளிலும் ஆங்கிலத்திற்கு மாற்றாக பாஜக அரசு இந்தியை பயன்படுத்த முயற்சிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் வெளிநாடுகளிலும் இந்தியாவின் தொடர்பு மொழியாக இந்தியை திணிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தி மொழியை ஊக்குவிக்கும் இந்த செயல் இந்தி பேசாத மாநிலங்களை இந்திய ஏகாதிபத்தியத்தின் நிரந்தர அடிமையாக மாற்றும் முயற்ச்சி. இதனால் இந்தியாவில் வங்காளிகள் மட்டுமின்றி இந்தி பேசாத மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும், இதனால்தான் கொல்கத்தாவில் "பங்களா போக்கோ" மாபெரும் பேரணி நடத்துகிறது என பேரணி குறித்த அந்த அமைப்பு விளக்கம் அளித்திருந்தது.
இதையும் படியுங்கள்: Narendra Modi : una himachal: இமாச்சலப்பிரதேச ஐஐடி கல்வி நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
இந்நிலையில் கொல்கத்தா நகரில் கலாச்சார மையமான ரவீந்திர சதானிலிருந்து தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஹஸ்ரா கிராசிங் வரை பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்திய ஏகாதிபத்தியத்தை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது, நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 22 மாநில மொழிகளுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என பலர் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இதில் ஆயிரக்கணக்கான வங்காளிகள் கலந்து கொண்டாலும், வாழ்வாதாரத்திற்காக வெளிமாநிலங்களில் இருந்து வங்காளத்தில் வாழ்ந்துவரும் தமிழர்கள், கன்னடர்கள், பஞ்சாபியர்கள், பெருமளவில் இப்பேரணியில் கலந்து கொண்டனர். அதில் இந்தி எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் இடம்பெற்றிருந்தன.
அதில் இந்திய ஏகாதிபத்தியத்தை கண்டிக்கும் பதாகைகளும் இருந்தன. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் முன்னின்று நடத்திய மாநிலத் தலைவர்களில் புகைப்படங்களும் பேரணியில் பங்கு பெற்றவர்கள் கையிலேந்தி சென்றனர். அதில் முதன் முதலில் நாட்டிலேயே இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திக் காட்டிய தமிழகத்தின் மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி என் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது.
இதையும் படியுங்கள்: பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்,முருங்கை மரத்தில்தான் குடித்தனம்!திமுகவிற்கு வாக்களித்து திணறும் மக்கள்-ஜெயக்குமார்
தற்போதும் அப்போராட்டத்தை தீரமுடன் முன்னெடுத்து வரும் தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்புகைப்படமும் பேரணியில் எந்தி செல்லப்பட்டது. மேலும் ஆச்சாரியா பிரபுல்ல சந்திரரே , சித்தரஞ்சன் தாஸ், அசோக் மித்ரா போன்ற இந்தி எதிர்ப்பு போராளிகளில் புகைப்படங்களும் அதில் இடம் பெற்றது.
இதேபோல் அக்டோபர் 16 அன்று மேற்குவங்கத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் பங்களா போகோ அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய பங்களா போக்கோ பொதுச்செயலாளர் போக்கோ கர்கா சட்டர்ஜி பேசுகையில், இந்திய ஏகாதிபத்தியத்தின் முன் வங்காளிகள் ஒருபோதும் சரண் அடைய மாட்டார்கள், சரணடைந்து பணிந்து விடுவார்கள் என்று டெல்லி நினைத்தால் அவர்களின் எண்ணம் பலிக்காது.
இந்தியை போல எங்களுக்கும் சம மொழி உரிமை வேண்டும், இதற்காகவா வங்க தியாகிகள் தங்கள் உயிரை நீத்தார்கள், இந்திய ஏகாதிபத்தியம் அடிமைகளாக்க நினைத்தால் வங்காளிகள் இந்திய ஏகாதிபத்தியத்தின் அனைத்து அடையாளங்களையும் இந்த புனித பூமியிலிருந்து அழிப்போம். இந்திக்கு எதிராக நேர்மையான மக்கள் அனைவரும் எங்களுடன் இருக்கிறார்கள். இந்திய ஏகாதிபத்தியம் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறது. பாரதிய ஜனதாவும் டெல்லியும் நெருப்புடன் விளையாடக்கூடாது. இவ்வாறு அவர் எச்சரித்தார்.
