Narendra Modi : una himachal: இமாச்சலப்பிரதேச ஐஐடி கல்வி நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

இமாச்சலப்பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, உனா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஐஐடி உயர் கல்வி நிறுவனத்தை தேசத்துக்கு அர்ப்பணித்தார்.

PM Modi laid foundation stone for the Bulk Drug Park in Una, HP.

இமாச்சலப்பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, உனா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஐஐடி உயர் கல்வி நிறுவனத்தை தேசத்துக்கு அர்ப்பணித்தார்.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த முறையும் பாஜக ஆட்சியைப்பிடிக்க தீவிரமாக இருந்து வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி அடிக்கடி இந்த மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து வருகிறார். 

ஜாக்பாட்! ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: மத்திய அமைச்சரவை முக்கிய முடிவு

PM Modi laid foundation stone for the Bulk Drug Park in Una, HP.

அந்த வகையில் கடந்த 2 மாதங்களில் 3 வது முறையாக பிரதமர் மோடி இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு இன்று வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 9-வது முறையாக இமாச்சலப்பிரதேசத்துக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்.

இமாச்சலப்பிரதேசம் உனா மாவட்டத்துக்கு முதல்முறையாக வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் வரவேற்றார். 

கர்நாடக ஹிஜாப் தடை வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வேறுபட்ட தீர்ப்பு

 உனா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஐஐடி உயர் கல்வி நிறுவனத்தை திறந்து வைத்து, அதை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். இந்த ஐஐடி கல்வி நிறுவனத்துக்கு கடந்த 2017ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

PM Modi laid foundation stone for the Bulk Drug Park in Una, HP.

உனா மாவட்டத்தில் ஹரோலி நகரில்  ரூ.1900 கோடி மதிப்பில் கட்டப்படஉள்ள மிகப்பெரிய மருந்துப் பூங்காவுக்கு அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டினார். இந்த மருந்துப்பூங்காவால் ரூ.10ஆயிரம் கோடி முதலீடு மாநிலத்துக்கு கிடைக்கும், ஏறக்குறைய 20ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனத் தெரிகிறது. 

அதன்பின் உனாவில் உள்ள அம்ப் அனதுராவில் இருந்து புதுடெல்லிக்கு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் கொடி அசைத்து பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

நாட்டின் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி முதல் அம்ப் அனதுராவுக்கு இடையே இயக்கப்படுகிறது. கடந்த மாதம் குஜராத்தில் காந்திநகர்-மும்பை இடையே 3வது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி உறுதி: சப்பாத்தி வேறு ரகமாம் !: குஜராத் ஏஏஏஆர் தீர்ப்பு

அதன்பின் உனாவில் உள்ள இந்திரா காந்திமைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச உள்ளார். அதன்பின் சம்பா மாவட்டத்தில் உள்ள சோகன் மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசஉள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios