ரயில்வே ஊழியர்களுக்கு 2021-22ம் ஆண்டுக்கான, உற்பத்தியோடு இணைக்கப்பட்ட 78 நாட்கள் ஊதியத்துக்கு ஈடான போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்துள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு 2021-22ம் ஆண்டுக்கான, உற்பத்தியோடு இணைக்கப்பட்ட 78 நாட்கள் ஊதியத்துக்கு ஈடான போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக்கூட்டத்தில் ரயில்வே துறையில் அதிகாரப் பதவியில் இல்லாத ஊழியர்களுக்கு 2021-22ம் ஆண்டுக்கு உற்பத்தியோடு இணைக்கப்பட்ட 78 நாட்கள் ஊதியத்துக்கு இணையான போனஸ் வழங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
கேரளாவில் நரபலி புதிதல்ல! 30 ஆண்டுகளுக்குமுன் பணக்காரராக மகளை கொலை செய்த மருத்துவர்
இந்தப் பிரிவில் ரயில்வே பாதுகாப்பு படை, ஆர்பிஎஸ்எப்ஆகியோர் வரமாட்டார்கள்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் சுமார் 11.27 லட்சம் ஊழியர்கள் வரை பயன் பெறுவார்கள். 78 நாட்கள் ஊதியத்துக்கு இணையான போனஸ் வழங்குவதன் மூலம் மத்தியஅரசுக்கு ரூ.1,832.09 கோடி செலவாகும்.
இதன்படி உற்பத்தி அடிப்படையிலான போனஸ் பெறுவதற்கு தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.7000 ஆகும். அதிகபட்சமாக ரயில்வே ஊழியர்களுக்கு போனஸாக ரூ.17,951 கிடைக்கும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆய்வு செய்வோம்: மத்திய அரசு, ஆர்பிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
ரயில்வே அமைச்சகம் முன்பு கூறுகையில் “ பயணிகள் மற்றும் சரக்குரயில் போக்குவர்து சிறப்பாக செயல்படுவதற்கு ரயில்வேஊழியர்கள் பங்கு முக்கியமானது. பொருளாதாரம் சீராக இயங்குவதற்கு உறுதுணை புரிகிறார்கள். அத்தியாவசியப் பொருட்களான உணவு, உரம், நிலக்கரி உள்ளிட்ட பொருட்கள் லாக்டவுன் காலத்தில் தடையின்றி கிடைக்க ரயில்வே ஊழியர்கள் பங்கு முக்கியமானது” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
