Asianet News TamilAsianet News Tamil

“கண்டம் விட்டு கண்டம் பாயும்” அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

agni 5-rocket-success
Author
First Published Dec 26, 2016, 1:00 PM IST


அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று கண்டம் விட்டு கண்டனம் பாயும், அதிநவீன அக்னி-5 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

ஒடிசா மாநிலம், பாலாசூர் அருகே உள்ள அப்துல்கலாம் தீவீல்(வீலர் தீவு முந்தைய பெயர்) சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை ஏறக்குறைய 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு சென்று எதிரி இலக்குகளை தாக்கும் தன்மை கொண்டது. அதாவது, சீனா முழுவதையும் இந்த ஏவுகணையால் தாக்க முடியும்.

agni 5-rocket-success

இந்த சோதனை குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், “ உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட, 5 ஆயிரம் கிலோமீட்டர் பாய்ந்து சென்று எதிரி இலக்கை தாக்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை நேற்று காலை 11 மணிக்கு நகரும் ஏவுதளத்தில் வைத்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

3 அடுக்குகளைக் கொண்ட இந்த ஏவுகணை பாதுகாப்பு துறையின் முக்கியமானதாகும், இது விரைவில் சிறப்பு படை பிரிவில் சேர்க்கப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

17 மீட்டர்(55 அடிநீளம்) நீளம், 50 டன் எடையும் கொண்ட கொண்டது இந்த அக்னி-5 ரக ஏவுகணையாகும். அக்னி பிரிவில் இது 4-வது சோதனையாகும்.

agni 5-rocket-success

இதற்கு முன் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதியும், 2013, செப்டம்பர் 15, 2015, ஜனவரி31 ந்தேதியும் சோதனை செய்யப்பட்டது. அக்னி வகை ஏவுகணைகளில் அக்னி-5 என்பது, புதிய தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, வழிகாட்டுதல் தொழில்நுட்பத்துடன், போர்களத்தில் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

அக்னி-1 ஏவுகணை 700 கி.மீ. தொலைவும், அக்னி-2 2000கி.மீ தொலைவும், அக்னி-3 மற்றும் அக்னி-4 2,500 முதல் 3,500 கி.மீ தொலைவும் செல்லும் திறன் கொண்டது எனக் குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios