csif: airports: விமானநிலைய பாதுகாப்பு தனியார் வசம் செல்கிறது! 3,000 சிஎஸ்ஐஎப் பணியிடங்கள் நீக்கம்
விமானநிலையங்களில் பாதுகாப்பு பணியில் இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர்(சிஎஸ்ஐஎப்) நீக்கப்படுகிறார்கள். பாதுகாப்பு பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
விமானநிலையங்களில் பாதுகாப்பு பணியில் இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர்(சிஎஸ்ஐஎப்) நீக்கப்படுகிறார்கள். பாதுகாப்பு பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
முக்கியத்துவம் இல்லாத பாதுகாப்புப்பணிகளில் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவார்கள், நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் கண்காணிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றில் அவர்கள் ஈடுபடுவார்கள்.
கடந்த 2018-19ம் ஆண்டில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை, சிவில் விமானப் பாதுகாப்பு(பிசிஏஎஸ்), மத்திய தொழிற்பாதுகாப்பு பிரிவு ஆகியவை சேர்ந்து செயல் திட்டம் ஒன்றை உருவாக்கின. இந்த செயல்திட்டம் தற்போது 50 விமானநிலையங்களில் அமலுக்கு வருகிறது.
இதன்படி விமானநிலையங்களில் பாதுகாப்பு பணியில் இருக்கும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் 3,049 பணியிடங்கள் நீக்கப்படுகின்றனர். அதற்குப் பதிலாக தனியார் பாதுகாப்பு பரிவைச் சேர்ந்த 1,924 பேர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். இது தவிர ஸ்மார்ட் தொழில்நுட்பமான கண்காணிப்பு கேமிரா, பயணிகளின் உடைமைகளைக் கண்காணிப்பது ஆகியவையும் அவர்களுக்குஒதுக்கப்படும்.
இதுகுறித்து விமானப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில் “ புதிய பாதுகாப்பு கட்டுமானத்தின் மூலம் 1900க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்பபுகள் உருவாவதோடு மட்டுமல்லாமல், விமானப் பாதுகாப்பில் அதிகரித்துவதும் தேவையை சிஎஸ்ஐஎப் வீரர்களால் நிரப்ப முடியும். புதிய விமானநிலையங்கள் வரும்போது அதில் கூடுதலாக சிஐஎஸ்எப் வீரர்களை நியமிக்கலாம்.
முக்கியத்துவம் அல்லாத பணிகளில் சிஐஎஸ்எப் வீரர்கள் நியமிக்கப்படுவது குறைக்கப்படும். அவர்களின் சக்தி வீணாகக் கூடாது என்பதற்காகவே தனியார் நியமிக்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட சில இடங்களில் கண்காணிப்பு கேமிரா உதவியுடன் தனியார் துறை பாதுகாப்பில் ஈடுபடும்.
டெல்லி, மும்பை உள்ளிட்ட விமானநிலையங்களில் தனியார் பாதுகாப்பு வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கியத்துவம் அல்லாத வரிசையை ஒழுங்குபடுத்துதல், விமானநிலைய ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் பாதுகாப்பு உதவி, குறிப்பிட்ட நுழைவு மற்றும் வெளியேறுமிடங்களில் ஒழுங்குபடுத்தும் பணி ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள்.
அதேநேரம் பயணிகளின் டிக்கெட், அடையாள அட்டைகளைச் சரிபார்த்தல்,பயணிகள் பரிசோதனை, தீவிரவாத கண்காணிப்பு, வெடிகுண்டு, போதைப்பொருள் கண்காணிப்பு, கண்டுபிடிப்பு ஆகியவற்றில் தொடர்ந்து சிஎஎஸ்ஐஎப் வீரர்களே ஈடுபடுவார்கள்.
டெல்லி ராஜபாதையின் பெயர் மாற்றம்... புதிய பெயர் என்ன தெரியுமா?
விமானநிலையங்களில் பணியில் சேரும் தனியார் பிரிவைச் சேர்ந்த வீரர்கள், பணியாளர்கள் சிஐஎஸ்எப் அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்” எனத் தெரிவி்த்தார்