amit shah: bjp: இந்த முறை 144 எங்களுக்குத்தான் ! அமித் ஷா, ஜே.பி. நட்டா பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகிவருகிறது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறைஅமைச்சர் அமித் ஷா இருவரும் பாஜக மூத்த நிர்வாகிகளைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகிவருகிறது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறைஅமைச்சர் அமித் ஷா இருவரும் பாஜக மூத்த நிர்வாகிகளைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.
அதாவது, கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 144 இடங்களை மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக கோட்டைவிட்டது. அந்த 144 இடங்களை இந்த முறை விட்டுவிடக்கூடாது.
அதற்கான செயல்திட்டம் என்ன என்பது குறித்து பாஜக மூத்த தலைவர்களுடன் ஜே.பி.நட்டா, அமித் ஷா இருவரும் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த 144 இடங்களையும் பல குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு மத்திய அமைச்சர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர்.
மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களி்ல உள்ள சட்டப்பேரவைத் தொகுதிககளுக்குச் சென்று அங்குள்ள களச்சூழலை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தனியாக அமைச்சர் குழு அமைக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அங்கு எந்த வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி உறுதியாகும் என்பதையும் அமைச்சர்கள் குழுஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டனர்.
மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், நரேந்திர சிங் தோமர், ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூர், மன்சுக் மாண்டவியா, ஜோதிர்ஆதித்யநா சிந்தியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், பாஜக தலைமை அலுவலகத்தில் பிற்பகலில் நடக்கும்கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது
இந்த கூட்டத்தின் போது, ஒவ்வொரு தொகுதி குறித்தும் விரிவான அறிக்கையை அமைச்சர்கள் குழு தாக்கல் செய்வார்கள் எனத் தெரிகிறது. குறிப்பாக கடந்த தேர்தலில் 144 இடங்களை பாஜக கோட்டைவிட்டது. அந்த இடங்களில் எல்லாம் பாஜக 3வது இடம், 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதற்கான காரணம் என்ன, எதைச் செய்தால் வெற்றி பெறலாம், என்ன தவறு செய்தோம் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்படுகிறது.
இந்த 144 தொகுதிகளுக்கும் அமைச்சர்கள் குழு சென்றுவிட்டதால், இன்றைய கூட்டத்தில் நடத்தும் ஆலோசனை முக்கியமானதாக இருக்கும். 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த 144 தொகுதிகளில் எந்தமாதிரி பணியாற்றினால் வெற்றி பெறலாம் என்பதுகுறித்து ஸ்வாட் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கின்றனர்
ஒவ்வொரு தொகுதி குறித்த ப்ளூபிரின்ட்,அதாவது மக்கள்தொகை, எந்தெந்த மதப்பிரிவினர் அதிகம், பூகோள அமைப்பு, வாக்காளர்கள் எண்ணிக்கை, தோல்விக்கான காரணங்கள், வாக்காளர்களை எவ்வாறு ஈர்க்கலாம், தொகுதிப்பிரச்சினை,சிக்கல்கள் ஆகியவை குறித்து விரிவான அறிக்கையில் இடம் பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன