பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை, கர்நாடகாவில் பல பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை, அதற்கான காரணம் குறித்து இந்த செய்தி அலசுகிறது.

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை, கர்நாடகாவில் பல பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை, அதற்கான காரணம் குறித்து இந்த செய்தி அலசுகிறது.

தென் மேற்கு பருவமழை வலுக்கத் தொடங்கியுள்ளது. முதல் சுற்றில் தென் மேற்கு பருவமழை பெரிதாக தென் மாநிலங்களுக்கு மழையைக் கொடுக்கவில்லை. ஆனால் 2வது சுற்றில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் ஜூலையிலிருந்து மழை தேவைக்கும் அதிகமாகப் பெய்துவிட்டது.

cyrus mistry: seat belt:tata sons: சைரஸ் மிஸ்திரி மரணம் சொல்லும் செய்தி என்ன? காரில் பேக்-சீட் பெல்ட் அவசியமா?

கடந்த வாரம் ராமநகரில் பெய்த கனமழையால் 5 ஏரிகள் உடைந்து நகருக்குள் வெள்ள நீர்வந்தது. இதனால் குடியுருப்புகள், வர்த்தக கட்டிடங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. பெங்களூரு-மைசூரு சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9மணிக்கு பெங்களூருவில் பெய்யத்தொடங்கிய மழை விடிய,விடிய இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்தது. ஒரே நாளில் 130 மில்லி மீட்டர் மழை பதிவானதால், பெங்களூரு நகரே வெள்ளநீரில் மிதக்க வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டது.

மகாதேவபுரா, பொம்மனஹள்ளி போன்ற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது, இதில் பெல்லாந்தூர் ஏரியும் நிரம்பி தண்ணீர் வெளியேறியதால், குடியுருப்புகள், சாலைகள் வெள்ளநீர் சூழந்து குளம்போல் காட்சியளித்தன.

டெல்லி ராஜபாதையின் பெயர் மாற்றம்... புதிய பெயர் என்ன தெரியுமா?

இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல், அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல், அலுவலகங்கள், அவசரப்பணிகளுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள் அனைத்திலும் மழைநீர் தேங்கி மக்களை படகில் சென்று மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில் “ பெங்களூருவில் கனமழை பெய்திருக்கிறது. இது தொடர்பாக நகர ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் பேசியிருக்கிறேன். வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மகாதேவபுரா, பொம்மனஹள்ளியில் மீ்ட்புப்பணிகளைத் தொடர இரு குழுக்களை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்

கர்நாடகத்தில் மழை கொட்டித்தீர்ப்பது ஏன்

பெங்களூவில் மட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13 சென்டிமீட்டர் மழை பதிவானது, மாநிலத்திலேயே அதிகபட்சமாகும். கர்நாடக மாநிலத்தில் 16 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இந்த அளவுக்கு மழை கொட்டித் தீர்க்க “ஷியர் ஜோன்” உருவாவதுதான் காரணம். ஷியர் ஜோன் என்பது, மேகக்கூட்டங்கள் திரண்டிருக்கும்போது எதிர்திசைக்காற்று நிரம்பிவந்து தாக்குவதாகும். இந்த ஷியர் ஜோன் கர்நாடகத்தின் தெற்குஉள்பகுதியில் 4.5 முதல் 5.8 கிலோமீட்டர் அளவுக்கு ப ரவி இருந்தது. இதனால்தான் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. 

நாடு முழுவதும் 14,500 பள்ளிகளுக்கு பிரதமர் மோடி புதிய அறிவிப்பு; தேசியக் கல்விக் கொள்கைக்கு முக்கியத்துவம்!!

பெங்களூருவில் உள்ள வானிலை மையத்தின் அதிகாரி டாக்டர் கீதா அக்னிஹோத்ரி இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் “ வான்வெளியில் ஷியர் ஜோன் உருவானதே பெங்களூரு நகரில் கனமழை கொட்டித்தீர்க்க காரணமாகும். பருவமழை காலத்தில் வழக்கமாக இதுபோன்று ஏற்படும். குறிப்பாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் இடங்கள், காற்று சுழற்றி அதிகமாக இருக்கும் இடங்களில் ஷியர்ஜோன் உருவாகும். 

கர்நாடக்தில் அடுத்த சில நாட்களுக்கு மிதமானது முதல் கனமழையை எதிர்பார்க்கலாம். பெரும்பாலும் இந்த மழை வடக்கிலிருந்து தெற்காக பெய்யக்கூடும். அதாவது கர்நாடகத்தின் உள்வடபகுதியில் இருந்து மேகக்கூட்டம் உருவாகி தமிழகத்தின் உள்மாவட்டங்கள்வரை மழை பெய்யக்கூடும்

LPG gas cylinder price: bjp: கடந்த 5 ஆண்டுகளில் எல்பிஜி சிலிண்டர் விலை 45% உயர்வு: 58 முறை விலை மாற்றம்

வடக்குநோக்கி இந்த மேகக்கூட்டம் நகரும்போது, பருவமழையில் திடீர் இடைவெளி ஏற்படும். ஆனால் இமயமலைப் பகுதிகளிலும் அதன் அடிவாரப்பகுதிகளிலும் கனமழை பெய்யும். சமீபத்தில் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு அவ்வாறுதான் ஏற்பட்டது. மாலத்தீவு ஒட்டிய பகுதியில் காற்றுசுழற்றி நீடிக்கிறது. இதனால் அடுத்துவரும் நாட்களிலும் பெங்களூருவில் கனமழை பெய்யக்கூடும்” எனத் தெரிவித்தார்