நாடு முழுவதும் 14,500 பள்ளிகளுக்கு பிரதமர் மோடி புதிய அறிவிப்பு; தேசியக் கல்விக் கொள்கைக்கு முக்கியத்துவம்!!
பிரதம மந்திரி பள்ளி யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், 'இந்தியா வளர்ச்சிக்கான பிரதம மந்திரி பள்ளி யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும். இவை தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் மாதிரிப் பள்ளிகளாக செயல்படும்.
மேலும், ''PM-SHRI பள்ளிகள் கல்வியை வழங்குவதற்கான நவீன, மாற்றம் மற்றும் முழுமையான முறையைக் கொண்டிருக்கும். கண்டுபிடிப்பு சார்ந்த, கற்றலை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சமீபத்திய தொழில்நுட்பம், ஸ்மார்ட் வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் பல உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தப்படும்.
மேலும் செய்திகளுக்கு..இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர்..மார்கரெட் தாட்சரின் மறுஉருவம் - யார் இந்த லிஸ் டிரஸ் ?
தேசிய கல்விக் கொள்கை சமீப ஆண்டுகளில் கல்வித் துறையை மாற்றியுள்ளது. PM-SHRI பள்ளிகள் தேசிய கல்வி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மேலும் பயனளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 இல் தொடங்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை 1986 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 34 ஆண்டுகால தேசியக் கல்விக் கொள்கையை மாற்றி அமைத்துள்ளது. மேலும், பள்ளி மற்றும் உயர்கல்வி முறைகளில் மாற்றியமைக்கும் சீர்திருத்தங்களுக்கு வழி வகுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீபத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசி இருந்த பிரதமர் மோடி, ''இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது. சுமார் 250 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தவர்களை பின்னுக்குத் தள்ளி 6வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறி இருப்பதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலை பெறுவதற்கு எவ்வாறு நாம் 1930 முதல் 1942 உழைத்தோமோ அதே உத்வேகத்துடன் நாம் முன்னேற வேண்டும். நான் எனது நாடு பின் தங்குவதற்கு விடமாட்டேன். அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு வந்துள்ளோம். இனி நாம் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்