டெல்லி ராஜபாதையின் பெயர் மாற்றம்... புதிய பெயர் என்ன தெரியுமா?
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை முதல் நேதாஜி சிலை வரையிலான ராஜபாதை, கர்த்தவ்யா பாதை (கடமை பாதை) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை முதல் நேதாஜி சிலை வரையிலான ராஜபாதை, கர்த்தவ்யா பாதை (கடமை பாதை) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டம், வரும் 8 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ராஜபாதையின் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மழையால் எங்களுக்கு ரூ.225 கோடி நஷ்டம்… குமறும் கர்நாடகா ஐடி நிறுவனங்கள்… முதல்வருக்கு கடிதம்!!
புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய அரசு செயலகம், பிரதமர், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கான குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது சென்ட்ரல் விஸ்டா திட்டம். டெல்லி ராஜ பாதையில் முதல் இந்தியா கேட் வரையிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் முழுமையாக மறு வடிவமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.
இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் வழக்கு... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
இதனை வரும் 8 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், ராஜ பாதையின் பெயர் கடமை பாதை என மாற்றப்பட்டுள்ளது. குடியரசு தினத்தின் போது, இந்த பாதையில் தான் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.