மழையால் எங்களுக்கு ரூ.225 கோடி நஷ்டம்… குமறும் கர்நாடகா ஐடி நிறுவனங்கள்… முதல்வருக்கு கடிதம்!!
மழையால் தங்களுக்கு 225 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மென்பொருள் நிறுவன கூட்டமைப்பு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மழையால் தங்களுக்கு 225 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மென்பொருள் நிறுவன கூட்டமைப்பு முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளனர். பெங்களூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும் சாலைகளில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த நிலையில் பெங்களூரில் பெய்த கன மழை காரணமாக மென்பொருள் நிறுவனங்களுக்கு 225 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மென்பொருள் நிறுவன நிறுவன கூட்டமைப்பு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதியுள்ள கடிதத்தில், பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வந்தனர்.
இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் வழக்கு... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
இதனால் ரூ.225 கோடி, மென்பொருள் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ORR சாலையில் உள்ள உள்கட்டமைப்பு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பெரும் வளர்ச்சி அடைந்து வரும் பெங்களூருவின் உள்கட்டமைப்பு திறன் குறித்து கவலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் கணிசமாக முதலீடு செய்த நிறுவனங்களின் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். பெங்களூர் நகரம் மற்றும் மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கள் ஏற்படாத வகையிலும், ஐடி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருளாதார சேதம் ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை. கடந்த 3 நாட்களாக பெய்த மழையின் காரணமாக இந்த நிலை தொடர்கிறது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் 14,500 பள்ளிகளுக்கு பிரதமர் மோடி புதிய அறிவிப்பு; தேசியக் கல்விக் கொள்கைக்கு முக்கியத்துவம்!!
இதனால் முடக்கப்பட்டுள்ள கட்டுமான திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும். புதிய மெட்ரோ கட்டுமானப்பணி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் அது மிகவும் மெதுவாக நடந்து வருகிறது. பெங்களூரில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சாலை மேம்பாட்டு திட்டங்கள் முடிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் பெங்களூரிலுள்ள சாலை கட்டுமான பணிகளை மேம்படுத்துவதற்கு அரசு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், பல மென்பொருள் நிறுவன ஊழியர்கள் டிராக்டர்களில் 50 ரூபாய் கொடுத்து வீடு திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.