Asianet News TamilAsianet News Tamil

Aadhar update : இந்த தேதி வரை ஆதார் விவரங்களை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்.. எப்படி தெரியுமா?

ஜூன் 14 வரை ஆதார் அட்டை விவரங்களை இலவசமாக ஆன்லைனில் புதுப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Aadhar update : Up to this date you can change Aadhaar details for free.. Do you know how?
Author
First Published Jun 2, 2023, 8:57 PM IST

ஆதார் அட்டை என்பது இந்திய மக்களுக்கு பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவ அடையாள எண் ஆகும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டைகளை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வங்கிக்கணக்கு தொடங்குதல், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தல் மற்றும் அரசின் மானியங்கள் அல்லது நலத்திட்ட உதவிகளை பெறுதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அடையாளம் மற்றும் முகவரி சான்றாக ஆதார் அட்டை செயல்படுகிறது.

இந்த சூழலில் ஆதார் அட்டையில் தங்கள் முகவரி, பெயர் மற்றும் பிற விவரங்களை மாற்றக் காத்திருக்கும் பயனர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஜூன் 14 வரை தங்கள் ஆதார் அட்டை விவரங்களை இலவசமாக ஆன்லைனில் புதுப்பிக்க அனுமதி வழங்கி உள்ளது. பொதுவாக, ஆதாரை புதுப்பிக்க ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஜூன் 14 வரை இலவசமாக ஆதார் விவரங்களை புதுப்பித்து கொள்ளாலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ” மோடி தான் அதை தொடங்கினார், ராகுல்காந்தி இல்லை” பாஜகவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி சசிதரூர் பதில்

myAadhaar போர்ட்டல் மூலம் ஆதார் அட்டை விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி புதுப்பிப்பதை UIDAI செயல்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் UIDAI பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “ myAadhaar போர்ட்டல் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வசதி ஜூன் 14, 2023 வரை இலவசமாகக் கிடைக்கும். மார்ச் 14 அன்று தொடங்கப்பட்ட இலவச சேவைகள் இப்போது கிட்டத்தட்ட கடைசி கட்டத்தில் உள்ளன.

உங்கள் ஆதாரை வலுப்படுத்த மக்கள்தொகை விவரங்களைப் புதுப்பிக்கவும். உங்கள் ஆதார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டிருந்தால் மற்றும் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், நீங்கள் இப்போது https://myaadhaar.uidai.gov இல் அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றலாம். மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை 'இலவசம்” என்று குறிப்பிட்டுள்ளது.

நீங்கள் ஏன் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்?

அனைத்து பயனர்களும் தங்களின் ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பதை UIDAI கட்டாயமாக்கியுள்ளது. மேலும், குழந்தைகளின் ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, குழந்தை 15 வயதை அடையும் போது பயனர்கள் அனைத்து பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிப்பதற்கு வழங்க வேண்டும்.

myAadhaar போர்ட்டலில் ஆதார் அட்டையை எவ்வாறு புதுப்பிப்பது?

  • முதலில் உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி myaadhaar.uidai.gov.in இல் உள்நுழையவும்.
  • இதற்குப் பிறகு, உங்கள் திரையில் கொடுக்கப்பட்டுள்ள 'proceed to update address' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும்
  • அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, ‘document update'. என்பதைக் கிளிக் செய்யவும்.
  • ஆவண விவரங்கள் சரியாக இருந்தால், அதைச் சரிபார்த்து, அடுத்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • இதற்குப் பிறகு, myAadhaar போர்ட்டலில் இருந்து ஆதார் புதுப்பிப்பு கோரிக்கை அனுப்பப்பட்டு, 14 இலக்க புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) உருவாக்கப்படும்.
  • பின்னர், இந்த எண்ணைப் பயன்படுத்தி புதுப்பிப்பின் நிலையை நீங்கள் சரிபார்க்க முடியும்.
  • நீங்கள் வழங்கும் விவரங்களை எப்போதும் இருமுறை சரிபார்த்து, பதிவேற்றுவதற்குத் தேவையான ஆவணங்கள் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க : நிலத்தடியில் பயங்கர சத்தத்துடன் கேட்ட மர்ம ஒலி.. பீதியில் உறைந்த மக்கள்.. அதிகாரிகள் விரைவில் ஆய்வு..

Follow Us:
Download App:
  • android
  • ios