Asianet News TamilAsianet News Tamil

” மோடி தான் அதை தொடங்கினார், ராகுல்காந்தி இல்லை” பாஜகவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி சசிதரூர் பதில்

நாட்டின் உள்விவகாரங்களை சர்வதேச அரங்கில் விவாதிக்கும் போக்கை தொடங்கியது பிரதமர் நரேந்திர மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் தான் என்று சசிதரூர் தெரிவித்துள்ளார்.

It was Modi who started it, not Rahul Gandhi : Congress MP Sasitharur's response to BJP's accusation
Author
First Published Jun 2, 2023, 6:04 PM IST

இந்தியாவின் ஜனநாயகம் குறித்து லண்டனில் ராகுல் காந்தி கூறிய கருத்துகளை பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. மேலும் சர்வதேச அரங்கில் ராகுல்காந்தி இந்தியாவை அவமதிப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் உள்விவகாரங்களை சர்வதேச அரங்கில் விவாதிக்கும் போக்கை தொடங்கியவர்கள் பிரதமர் நரேந்திர மோடியும் பாரதிய ஜனதா கட்சியும்தான் என்று சசிதரூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சசிதரூர் "நாட்டிற்குள் இருக்கும் அரசியல் வேறுபாடுகள் எல்லையில் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், இதை முறியடித்தவர்கள் பா.ஜ.க.வும், மோடியும்தான் என்பதும் உண்மை. கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் நல்லது எதுவும் நடந்ததில்லை என்று சர்வதேச மேடையில் பிரதமர் மோடிதான் கருத்து தெரிவித்தார். 

இதையும் படிங்க : Breaking : மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்.. சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு..

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான சசிதரூ, காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்தும், தனது மனைவி சுனந்தா புஷ்கரின் மறைவு குறித்தும் மனம் திறந்து பேசினார். 2022-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டது குறித்து கட்சியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்த செய்திகள் குறித்து கேட்டபோது, அது வெறும் வதந்தி என்று கூறிய தரூர், இது குறித்து அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரிடம் விவாதித்ததாக கூறினார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் மூவரையும் சந்தித்தேன், கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக, அதற்கு எதிராக ஆலோசனை வழங்கினால், நான் தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிட தயாராக இருந்தேன். ஆனால், அவர்கள் அப்படிச் சொல்லவே இல்லை. உண்மையில், என்னை ஊக்கப்படுத்தினர். மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்றார், அந்த முடிவை நான் மதிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசிய சசி தரூர், தனது மனைவியின் மரணத்தில் தனது பெயர் சம்பந்தப்பட்ட விதம் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், "சில நபர்கள் அதில் (என் மனைவி மரணத்தில்) அரசியல் ஆதாயம் பெற முயற்சிப்பதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும், நான் ஒருபோதும் அத்தகைய நடத்தையில் ஈடுபட முடியாது." என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சசிதரூர் தனது கட்சிக்குள் எதிர்ப்பு இருப்பதாகவும், மாநில அரசியலில் தாம் சிக்குவதை சிலர் விரும்ப மாட்டார்கள் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், இது மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துமானால், கேரள மாநில அரசியலில் ஈடுபடுவதை பரிசீலிப்பேன் என்று கூறினார்.

இதையும் படிங்க : கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் ரூ. 2000: முதலமைச்சர் சித்தராமையா அதிரடி!!

Follow Us:
Download App:
  • android
  • ios