துப்பாக்கி முனையில் இளம் பெண்ணை கடத்தி இரு வாரங்களாக அறையில் அடைத்து வைத்து  பலமுறை தொடர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலை நகர் டெல்லியில் பதினோராம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திய 19 வயது இளம் பெண் ஹசினா. இவர் தனது  பெற்றோருடன் அமான் விகாரில் கடந்த ஒரு மாதமாக வசித்து வருகிறார். அதற்கு முன்பாக குடும்பத்துடன் சுல்தான்புரியில் வசித்தபோது அண்டை வீட்டில் வசிக்கும் குல்தீப்  என்பவருடன் அவர்களுக்கு நட்பானது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் பெண்ணை அவரது வீட்டில் இருந்து, தனது வீட்டிலுள்ள தனி அறைக்கு பெண்ணை குல்தீப் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் தப்பித்துச் செல்லக்கூடாது என்பதற்காக அவரது கையை முதுகுப்புறத்தில் கயிறால் கட்டி வைத்து வாயில் அழுக்குத் துணியை திணித்து இருட்டு அறையில் அடைத்து வைத்தார்.

அதன் பிறகு தான் நினைத்த போதெல்லாம் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதனிடையே, கடந்த 9ம் தேதியன்று  கையை கட்ட மறந்து குல்தீப் உறங்கியதால் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஹசினா தப்பித்து தனது வெட்டுக்கு வந்த ஹசினா. இரண்டு வாரங்களாக தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து பேசிய அந்த பெண்ணின் தந்தை, ‘‘இந்த காவல் நிலையத்திற்கு நான் வருவது முதல் முறையல்ல. பெண்ணைக் காணவில்லை என புகார் அளிக்க கடந்த சில தினங்களாக நான் வந்து சென்றேன். ஆனால் புகாரை பதிவு செய்ய போலீசார் மறுக்கிறார்கள்’’, என்றார். தந்தையின் குற்றச்சாட்டை மறுத்த புறநகர் டிசிபி எம்என் திவாரி, ‘‘பெண்ணைக் காணவில்லை என யாரும் எங்களிடம் புகார் அளிக்கவில்லை. இரு வாரங்களாக அறையில் அடைத்து வைத்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளதாக இப்போதுதான் இந்தப் பெண்ணே நேரில் வந்து புகார் கொடுத்தார்.

உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்திருப்பதோடு, குழு அமைத்து விசாரணையையும் தொடங்கி உள்ளோம்’’, எனக் கூறினார். இதனிடையே, தப்பிச் சென்ற பெண் நிச்சயமாக போலீசில் புகார் அளிப்பார் என நன்கு அறிந்து கொண்ட குல்தீப், தனது வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகி உள்ளார். அவரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

நிர்பயா பலாத்கார சம்பவத்தின் காயம் இன்னும் ஆறாத நிலையில், இதுபோன்ற பல்வேறு கற்பழிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.