Pingali Venkayya: flag of india: தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கையா நினைவாக அஞ்சல்தலை வெளியீடு

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கையா நினைவாகவும், அவருக்கு மரியாதை செலுத்தும்வகையில் சிறப்பு அஞ்சல்தலையை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது.

A postage stamp honouring Pingali Venkayya will be issued.

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கையா நினைவாகவும், அவருக்கு மரியாதை செலுத்தும்வகையில் சிறப்பு அஞ்சல்தலையை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது.

பிங்காலி வெங்கையாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, டெல்லியில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் பிங்காலி வெங்கையா நினைவு அஞ்சல்தலையை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

இந்தத் தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, பிங்காலி வெங்கையா வடிவமைத்த தேசியக் கொடியும் பார்வைக்கு வைக்கப்படும். 

A postage stamp honouring Pingali Venkayya will be issued.

கேரள இளைஞர் குரங்கு அம்மையால் தான் உயிரிழந்தார்… உறுதிப்படுத்தியது மருத்துவ அறிக்கை!!

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிங்காலி வெங்கையாவின் குடும்பத்தாருக்கு மத்திய அரசு சிறப்பு அழைப்பு விடுத்துள்ளது. அவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செய்ய உள்ளார். பிரதமர் மோடி, அவர்களுடன் உரையாட உள்ளார்.

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறுகையில் “ பிங்காலி வெங்கையாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி கோரிக்கை வந்துள்ளது. ஆனால், அவர் சார்ந்த ஆந்திர மாநில அரசிடம் இருந்து இதுவரை எந்தவிதமான கோரிக்கையும் எழவில்லை. இந்த விவகாரம் மத்திய அரசால் பரிசீலிக்கப்பட்டு, உரிய முடிவு எடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்

75-வதுசுதந்திரதின விழாவைக் கொண்டாடும் வகையில் ஹர் ஹார் திரங்கா எனும் யாத்திரையை மத்திய அரசு நாளை தொடங்குகிறது. ஆகஸ்ட் 9 முதல் 13ம் தேதிவரை மாநில அரசுகள், அரசு சாரா அமைப்புகள், அனைத்துக் கட்சிகள் சேர்ந்து, நகரங்கள், கிராமங்கள், தெருக்களில் பிரபாத் பீரி என்ற பெயரில் கொண்டாட்டங்களை நடத்தவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதிவரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

A postage stamp honouring Pingali Venkayya will be issued.

maan ki baat: pm modi: கவனம் ஈர்த்த கர்நாடக தேனீ வளர்ப்பு விவசாயி: பிரதமர் மோடி பாராட்டு

தேசியக் கொடியின் வரலாறு

சுவாமி விவேகானந்தரின் மாணவராக இருந்த, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சிஸ்டர் நிவேதிதா கூறுகையில், “ கடந்த 1904ம் ஆண்டு நான்தான் முதல் தேசியக் கொடியை வடிவமைத்தேன்” எனத் தெரிவித்தார்.

அந்த தேசியக் கொடி இரு கட்டங்களைக் கொண்டதாக இருந்தது. அதாவது மஞ்சள் நிறமும், சிவப்பு நிறமும், வஜ்ராவின் அடையாளமும் இருந்தது, நடுவில் தாமரையின் சின்னமும் இருந்தது. வங்க மொழியில் வந்தே மாதரம் என்று எழுதப்பட்டிருந்தது.

அதன்பின் 1906ம் ஆண்டு தேசியக் கொடி மறுவடிவம் பெற்று நீலம், மஞ்சள், சிவப்பு ஆகிய வண்ணங்களையும், 2 அடையாளங்களான சூரியன், நட்சத்திறங்களைக் கொண்டதாகவும் இருந்தது.தேசியக்கொடியில் வந்தே மாதரம் என எழுதப்பட்டிருந்தது.

A postage stamp honouring Pingali Venkayya will be issued.

pm narendra modi: பிரதமர் மோடியின் சகோதரர் டெல்லியில் தர்ணா போராட்டம் : காரணம் என்ன?

அதே ஆண்டில் மற்றொரு தேசியக் கொடி வடிவமைக்கப்பட்டது. அந்தக் கொடியில் ஆரஞ்சு நிறம், மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்கள் இருந்தன. அந்தக் கொடியை தாமரைக் கொடி அல்லது கொல்கத்தா கொடி என அழைக்கப்படுகிறது.

1907ம் ஆண்டு மேடம் காமா மற்றும் அவரின் குழுக்கள் சேர்ந்து, ஜெர்மனியில் இந்திய தேசியக் கொடியை ஏற்றினர். டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாளர், லோகமான்ய திலக் ஆகியோர் சேர்ந்து 1917ம் ஆண்டு ஹோம்ரூல் இயக்கத்துக்காக மற்றொரு தேசியக் கொடியை வடிவமைத்தனர்.

பலரும் தேசியக் கொடிக்காக பல்வேறு வடிவமைப்புகளைச் செய்தாலும், தேசியக் கொடியை வடிவமைத்த பெருமை ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கையாவைத்தான் சாரும்.

யார் இந்த பிங்காலி வெங்கையா?

ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் பிங்காலி வெங்கையா. மகாத்மா காந்தியின் தீவிரமானஆதரவாளரான பிங்காலி வெங்கையாதான் தேசியக் கொடியை வடிவமைக்க முக்கியக் காரணமானவர்.

A postage stamp honouring Pingali Venkayya will be issued.

நிலவியலில் பட்டப்படிப்பு முடித்த பிங்காலி வெங்கையா, ஆந்திராவில் வைரச் சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால்தான் வைரம் வெங்கையா என்ற பெயரும் உண்டு. இந்திய, ஆங்கிலேயப் படையில் வெங்கையா பணியாற்றியபோதுதான், மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

காசு சேர்க்க வேறு இடமில்லையா! ராஜஸ்தான் இளைஞர் வயிற்றுக்குள் 63 ஒரு ரூபாய் நாணயங்கள்: ஆப்ரேஷனில் அகற்றம்

சுதந்திரத்துக்கு முன் பல்வேறுவிதமான தேசியக் கொடிகள் பயன்படுத்தப்பட்ட வந்தநிலையில் காக்கிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், பிங்காலி வெங்கையாவிடம் தேசியக் கொடியை வடிவமைக்கும் பொறுப்பை மகாத்மா காந்தி கொடுத்தார்.

பிங்காலி வெங்கையா ஒரு கொடியை வடிவமைத்து விஜயவாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வழங்கினார். அந்தக் கொடி காங்கிரஸ் கட்சிக்கு ஏற்றார்போல் இருந்தது. முதலில் தேசியக் கொடியில் நூல்நூற்கும் ராட்டையும், பின்னர் அதை நீக்கப்பட்டு அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. பல்வேறு மாற்றங்கள் தேசியக் கொடியில் செய்யப்பட்டு, கராச்சியில் நடந்த காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் ஏற்கப்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios