pm narendra modi: பிரதமர் மோடியின் சகோதரர் டெல்லியில் தர்ணா போராட்டம் : காரணம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நாளை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நாளை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளார்.
அனைத்து இந்திய நியாயவிலைக் கடைகள் டீலர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக இருக்கும் பிரஹலாத் மோடி இருக்கிறார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தக் கூட்டமைப்பு சார்பில் நாளைநடத்தப்பட உள்ள தர்ணா போராட்டத்தில் பிரஹலாத் மோடியும் பங்கேற்கிறார்.
sanjay raut: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைதுக்கு காரணம் என்ன? பத்ரா சாவல் நிலமோசடி என்றால் என்ன?
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அனைத்து இந்திய நியாயவிலைக் கடைகள் டீலர்கள் கூட்டமைப்பு சார்பில் நாளை தர்ணா போராட்டம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, தங்களின் கோரிக்கைகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைப்போம். அதுமட்டுமல்லாமல் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய்,பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலையை குறைத்து வழங்கும் போது ஏற்படும் இழப்புக்கு இழப்பீடு தேவை. மேற்கு வங்கத்தில் இருப்பதுபோல், மேற்கு வங்க ரேஷன் மாடல் நியாயவிலைக்கடை தேவை.
ஆம்புலன்ஸ் தராததால் தாயின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற மகன்: மத்திய பிரதேசத்தின் அவலம்
ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் உரிய அனைத்து நிலுவைத் தொகைகளையும் உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்று அனைத்து இந்திய நியாயவிலைக் கடைகள் டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.