mp:ஆம்புலன்ஸ் தராததால் தாயின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற மகன்: மத்திய பிரதேசத்தின் அவலம்
மத்தியப் பிரதேசத்தில் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராததாலும், கையில் பணம் இல்லாததாலும், உயிரிழந்த தனது தாயின் சடலத்தை பைக்கில் கட்டிக்கொண்டு மகன் சென்ற சம்பவம் மனதை உலுக்குகிறது.
மத்தியப் பிரதேசத்தில் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராததாலும், கையில் பணம் இல்லாததாலும், உயிரிழந்த தனது தாயின் சடலத்தை பைக்கில் கட்டிக்கொண்டு மகன் சென்ற சம்பவம் மனதை உலுக்குகிறது.
மத்தியப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக சிவராஜ் சவுகான் உள்ளார்.
பிடி இறுகுகிறது! சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது மும்பை போலீஸார் புதிய வழக்கு
கடந்த வாரம் மத்தியப்பிரதேசத்தின் சாஹர் நகரில் 30 மாணவர்களுக்கும் ஒரே சிரிஞ்ச் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக செய்தி வெளியானது பெரும்பரபரப்பையும், மருத்துவ விழிப்புணர்வு இல்லாத நிலையையும் வெளிக்காட்டியது. இப்போது உயிரிழந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் கூட வழங்கப்படாத செய்தி வேதனையளிக்கிறது.
அனுப்பூர் மாவட்டம் குடாரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்மந்திரி யாதவ். இவருக்கு திடீரென கடந்த வியாழக்கிழமை நெஞ்சு வலி ஏற்பட்டது. அங்குள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, அவரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர்.
இதனால், ஜெய்மந்திரியை அழைத்துக் கொண்டு அவரின் மகன்கள் சிகிச்சைக்காக ஷாதோல் மாவட்டத்தில் உள்ள ஷாதோல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
3 வது நாளாக குறைந்த பாதிப்பு.. இன்று ஒரே நாளில் 16,464 பேருக்கு கொரோனா.. 39 பேர் பலி..
ஆனால், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பலன் அளிக்காமல் ஜெய்மந்திரி உயிரிழந்தார். உயிரிழந்த தனது தாயின் உடலைக் கொண்டு செல்ல மருத்துவனை நிர்வாகத்திடம் மகன்கள் ஆம்புலன் கேட்டும் ஏதும் வழங்கவில்லை. இதனால் வெறுப்படைந்த இருமகன்களும் தாயின் உடலை பைக்கில் வைத்து 80 கி.மீ தொலைவில் உள்ள தங்களின் ஊருக்குக் கொண்டு சென்றனர்.
அந்த பெண்ணின் மகன் சுந்தர் யாதவ் கூறுகையில் “ எங்களின் தாய்க்கு மருத்துவமனை நிர்வாகம் முறையான சிகிச்சை அளிக்கவில்லை, செவிலியர்கள் கவனக்குறைவுடன் நடந்ததால்தான் உயிரிழந்தார்.
அவர் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கேட்டதற்கும் அதையும் வழங்கவில்லை.
உயிர்பெற்ற சதுரங்கக் காய்கள்… புதுக்கோட்டை ஆட்சியரை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா!!
எங்களால் தனியார் வாகனத்துக்கு செலவு செய்ய ரூ.5ஆயிரம் பணம் இல்லை. இதனால் ரூ.100க்கு இரு மரக்கட்டைகளை வாங்கி எங்கள் தாயின் சடலத்தை வைத்துக் கட்டி கொண்டு சென்றோம்” எனத் தெரிவித்தார்.
ஷாதோல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்துவசதிகள் இருந்தபோதிலும் அங்கு முறையான சிகிச்சையளிப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.