காசு சேர்க்க வேறு இடமில்லையா! ராஜஸ்தான் இளைஞர் வயிற்றுக்குள் 63 ஒரு ரூபாய் நாணயங்கள்: ஆப்ரேஷனில் அகற்றம்
ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரின் வயிற்றியிலிருந்து 63 ஒரு ரூபாய் நாணயங்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையில் அகற்றியுள்ளனர்.
ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரின் வயிற்றியிலிருந்து 63 ஒரு ரூபாய் நாணயங்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையில் அகற்றியுள்ளனர்.
ஜோத்பூர் நகரில் சாபுன்ஸி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த 36வயதான இளைஞருக்கு திடீரென வயிற்றுவலி கடந்தவியாழக்கிழமை அதிகமானது. இதையடுத்து அன்று மாலை, மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனைக்கு அவரை குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்
பிடி இறுகுகிறது! சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது மும்பை போலீஸார் புதிய வழக்கு
அங்கிருந்த மருந்துவர்கள், இளைஞரைப் பரிசோதனை செய்துவிட்டு, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அப்போது, எஸ்கேரேயில் ஏதோ பொருட்கள் இளைஞரின் வயிற்றுக்குள் இருப்பது தெரியவந்தது.
அது குறித்து இளைஞரிடம், மருத்துவர்கள் கேட்டபோது, தான் ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கிவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர். அடுத்த ஒரு மணிநேரத்தில் அறுவசை சிகிச்சையும் நடந்தது.
ஆனால், அறுவை சிகிச்சையின்போது, இளைஞரின் வயிற்றில் ஒரு ரூபாய் மட்டுமே இருக்கும் என மருத்துவர்கள் நினைத்தனர். ஆனால், அறுவை சிகிச்சையின்போது, 63 ஒரு ரூபாய் நாணயங்கள் இருந்தது கண்டு அதிர்ந்தனர். அதன்பின் இளைஞரின் வயிற்றியில் இருந்த அனைத்து நாணயங்களும் அகற்றப்பட்டன.
மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. 1 பாட்டில் வாங்கினால், 2 பாட்டில் சரக்கு இலவசம்.! அதிரடி ஆஃபர்
இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநர் மரது்துவர் விகாஸ் ராஜ்புரோஹித் கூறுகையில் “ என்டோஸ்கோபி மூலம் அறுவைசிகிச்சை நடந்து, நாணயங்கள் நீக்கப்பட்டன. இளைஞரிடம் கேட்டபோது, தனக்கு சோகமாக இருக்கும்போதெல்லாம் நாணயத்தை விழுங்கினேன் எனத் தெரிவித்தார்.
உயிர்பெற்ற சதுரங்கக் காய்கள்… புதுக்கோட்டை ஆட்சியரை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா!!
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உதய்பூரில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. ஒரு இளைஞரின் வயிற்றில் இதுபோன்று அறுவை சிகிச்சை செய்தபோது, 50வகையான பொருட்கள் எடுக்கப்பட்டன. சாவி, காசுகள், சிறியமரக்கட்டை, மோதிம், ஊசி, கிளிப் போன்ற பொருட்கள் வயிற்றுக்குள் இருந்தது அதை நீக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்