ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்ட நிலையில், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன

ஆந்திர மாநிலம் விஜயநகரம் ரயில் நிலையத்தில் இன்று காலை சரக்கு ரயில் லூப் டிராக்கில் இருந்து மெயின் டிராக்கிற்கு செல்லும் போது தடம் புரண்டது. எனினும் ரயில் ஓட்டுநருக்கு சரியான நேரத்தில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ரயில் போக்குவரத்தில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சரக்கு ரயில் காலி கண்டெய்னர் பெட்டியை ஏற்றிச் சென்றதாகவும், சரக்கு ரயில் லூப் லைனில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும், சரக்கு ரயிலின் ஒரு டயர் தடம் புரண்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பழுதுபார்ப்பு பணிகள் விரைவில் முடிவடையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ரயில்வே அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “நாங்கள் இப்போது சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்த ரயில் தடம் புரண்டதால், காயமோ சேதமோ ஏற்படவில்லை. எனினும் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விஜயநகரம் ரயில் நிலையத்தில் பல ரயில்கள் நிறுத்தப்பட்டது. தடம் புரண்ட சரக்கு ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆதித்ய தாக்கரேவை நெருங்குகிறதா அமலாக்கத்துறை; மும்பையில் அதிரடி ரெய்டு!!

கடந்த ஒரு வாரத்தில் சரக்கு ரயில் தடம் புரள்வது இது இரண்டாவது முறையாகும். ஆந்திராவில் ஒரே வாரத்தில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். கடந்த புதன்கிழமை, தடி மற்றும் அனகப்பள்ளி இடையே சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தண்டவாளத்தில் தடம் புரண்டது.

முன்னதாக ஜூன் 17 அன்று ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள அம்படோலா அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக, எந்த காயமும் ஏற்படவில்லை, ஆனால் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல்.. டெல்லி போலீசார் பரபரப்பு தகவல்