ஆதித்ய தாக்கரேவை நெருங்குகிறதா அமலாக்கத்துறை; மும்பையில் அதிரடி ரெய்டு!!
கொரோனா ஊழல் தொடர்பாக ஆதித்ய தாக்கரேவுக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வால் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா காலத்தில் ஊழல் நடந்ததாக உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவர் ஆதித்ய தாக்கரேவுக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வால் மற்றும் சுராஜ் சவான் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. மேலும் எம்பி சஞ்சய் ராவுத்துக்கு நெருக்கமான சுஜித் பட்கருக்கு சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது.
தானே மற்றும் நவி மும்பையில் இருக்கும் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் தானே நகராட்சி கமிஷனராகவும், மும்பை மாநகராட்சியின் கூடுதல் கமிஷனராகவும் சஞ்சீவ் ஜெய்ஸ்வால் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி மாதம் மும்பை மாநகராட்சி கமிஷனர் ஐஎஸ் சஹலிடம் மருத்துவமனை ஒப்பந்த ஒதுக்கீடுகள் குறித்து அமலாக்கத்துறை வாக்குமூலம் பெற்று இருந்தது.
'நான் மோடி ரசிகன்..' பிரதமர் மோடியை புகழ்ந்த டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்
இதற்கு முன்னதாக எம்பி சஞ்சய் ராவுத்துக்கு நெருங்கிய நண்பரான சுஜித் பாட்கர் மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு பதிவு செய்து இருந்தது. சுகாதாரத்துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் மும்பையில் கொரோனா தொற்று மருத்துவத்தில் ஈடுபட்டு மருத்துவமனை கான்டிராக்ட் பெற்று இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்து இருந்தது. அதாவது. கொரோனா காலத்தில் மும்பையில் பல்வேறு இடங்களில் தற்காலிக மருத்துவமனை நிறுவி சிகிச்சை அளித்து வந்தனர். இவற்றில் தற்போது ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மைக்ரான் சிப் சோதனை ஆலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!