மைக்ரான் சிப் சோதனை ஆலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தையொட்டி, 2.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மைக்ரான் சிப் சோதனை ஆலைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Centre Approves Micron Chip Testing Plant

அமெரிக்காவை  சேர்ந்த சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜியின் புதிய செமிகண்டக்டர் சோதனை ஆலை அமைப்பதற்கான 2.7 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தையொட்டி, அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கட்டப்படவுள்ள ஆலைக்கு சுமார் .34 பில்லியன் டாலர் மதிப்பிலான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையை வழங்கவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஊக்கத்தொகையின் அளவை நிர்ணயம் செய்ய  மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கட்டாயம் தேவை. மைக்ரான் நிறுவனத்தின் ஆலை தொடர்பான திட்டம் இதற்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும், அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தையொட்டி இதற்கான ஒப்புதலை அமைச்சரவை அளித்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், மத்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்கள் உள்பட, மைக்ரான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் என யாரும் இதுகுறித்த கருத்துகளுக்கு பதிலளிக்கவில்லை. அதேசமயம், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, இதுகுறித்தான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடின் அமெரிக்க பயணம் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்து வருகிறார். ஜூன் 22ஆம் தேதியன்று வெள்ளை மாளிகையில் அவருக்கு அரசு சார்பில் விருந்து அளிக்கப்படவுள்ளது.

அமெரிக்க சிப் நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு வெள்ளை மாளிகை அழுத்தம் கொடுத்து வருவதன் ஒருபகுதியாக மைக்ரான் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்திருக்கலாம். கூடுதல் முதலீடுகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அமெரிக்க நிர்வாக அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுடன் அமெரிக்கப் பொருளாதாரத்தை சிறப்பாக ஒருங்கிணைக்கும் அதே வேளையில், உள்நாட்டு நிறுவனங்கள் சீனாவில் வணிகம் செய்வதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புவதாக அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tesla : இந்தியாவிற்கு வரும் டெஸ்லா.. பிரதமர் மோடி - டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் சந்திப்பில் நடந்தது என்ன.?

மைக்ரான் பாதுகாப்பு மதிப்பாய்வில் தோல்வியடைந்துவிட்டதாகவும், அந்த நிறுவனத்திடம் இருந்து பொருட்களை வாங்கும் ஆபரேட்டர்களை தடை செய்வதாகவும் சீன கடந்த மே மாதம் கூறியது. இது பைடன் நிர்வாகத்தை கோப்பப்படுத்தியதாக சுட்டிக்காட்டுகிறார்கள். அமெரிக்க வர்த்தகத் துறை இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

மைக்ரானின் அனுமதிகளை நன்கு அறிந்த ஒரு இந்திய தொழில்துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், குஜராத்தின் சனந்த் நகரில் மைக்ரான் டெக்னாலஜியின் புதிய ஆலை அமையவுள்லதாக தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஆலைகள் செமி கண்டக்டர்களை சோதனை செய்து பேக் செய்கின்றன. ஆனால் அவற்றை உற்பத்தி செய்யாது. ஆலையில் வாடிக்கையாளர்களுக்காக சிப்பை வாங்கலாம் மற்றும் பேக்கேஜ் செய்யலாம் அல்லது மற்ற நிறுவனங்கள் தங்கள் செமி கண்டக்டர்களை அனுப்புவதற்கு முன் சோதனைக்கு அனுப்பலாம்.

மைக்ரானின் இந்தியா ஆலையானது இந்தியாவை செமி கண்டக்டர் தளமாக மாற்றும் மோடியின் பார்வைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கலாம். ஆனால், உண்மையான வெற்றிக்கு இந்தியாவில் செமி கண்டக்டர்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios