Asianet News TamilAsianet News Tamil

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2.5 வயது சிறுமி; 22 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வரும் மீட்புப் பணிகள்..

மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2.5 வயது சிறுமியை மீட்கும் பணி 22 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றன

A 2.5-year-old girl who fell into a 300-foot borewell in madhyapradesh ; Rescue operations are going on for more than 22 hours.
Author
First Published Jun 7, 2023, 4:32 PM IST

மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் நேற்று இரண்டரை வயது சிறுமி விழுந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. சிறுமியை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். செவ்வாய்கிழமை 20 அடி ஆழத்தில் சிக்கியதாக கூறப்பட்ட சிறுமி தற்போது மேலும் சறுக்கி தற்போது 50 அடி ஆழத்தில் சிக்கியுள்ளார். இச்சம்பவம் செவ்வாய்கிழமை பிற்பகல் முகவலி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

22 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும், மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பகுதியில் பாறைகள் நிறைந்துள்ளதால் நேரம் ஆகிறது என்று கூறினார். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து பேசிய போது “ நாங்கள் தொடர்ந்து நிலத்தை தோண்டும் போது, சிறுமி மேலும் கீழே சரிந்துள்ளார். நாங்கள் அந்த சிறுமிக்கு ஆக்ஸிஜனை வழங்கி விரைவில் வெளியேற்ற முயற்சிக்கிறோம். தேசிய பேரிடர் மீட்பு குழுவும் அந்த இடத்தில் உள்ளது.” என்று தெரிவித்தார்.

16,000 இதய அறுவை சிகிச்சைகளை செய்த மருத்துவர் மாரடைப்பால் மரணம்!

செஹோர் மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானும், இந்தச் சம்பவத்தை அறிந்து, சிறுமியை பாதுகாப்பாக வெளியேற்றுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதல்வர் அலுவலக அதிகாரிகளும் மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் புரளியால் கோலாபூரில் வெடித்த மோதல்; ஊரடங்கு உத்தரவு அமல்!!

Follow Us:
Download App:
  • android
  • ios