இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி ஹைதராபாத்தில் அவரது 125 அடி உயர சிலையை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி ஹைதராபாத்தில் அவரது 125 அடி உயர சிலையை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். ஹைதராபாத்தின் ஹூசைன் சாகர் ஏரி கரையில் ரூ.146.50 கோடி செலவில் வெங்கலத்தால் அண்ணல் அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டது. தலைமைச்செயலகத்திற்கு அருகே நிறுவப்பட்டுள்ள இந்த சிலைக்காக 360 டன் இரும்பும், 114 டன் வெங்கலமும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி... எம்பர் சாலையில் உள்ள உள்ள வேறொரு பங்களாவில் குடியேறுவதாக தகவல்!!
அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி ஹைதராபாத்தில் அவரது 125 அடி உயர சிலையை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். இந்த சிலை திறப்பு விழாவில், அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக ஹெலிகாப்டரில் இருந்து சிலைக்கு மலர்கள் தூவப்பட்டன.
இதையும் படிங்க: அசாம் சென்ற பிரதமர் மோடி... 11,000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு!!
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கலந்துக்கொண்டார். இந்த விழாவில் பொதுமக்கள் கலந்துக்கொள்ள ஏதுவாக மாநில போக்குவரத்து கழகம் சார்பில் 750க்கும் மேற்ப்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. அதுமட்டுமின்றி விழாவில் பங்கேற்கும் மக்கள் அனைவருக்கும் உணவு, இனிப்புகள், மோர் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
