மைனர் சகோதரருடன் உறவில் ஈடுபட்ட 12 வயது சிறுமி கர்ப்பம்.. கர்ப்பத்தை கலைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..
தனது மைனர் சகோதரருடன் தாம்பத்ய உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 வயது சிறுமியின் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது
தனது மைனர் சகோதரருடன் தாம்பத்ய உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 வயது சிறுமியின் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கரு ஏற்கனவே 34 வார கர்ப்பத்தை அடைந்து முழுமையாக வளர்ச்சியடைந்துவிட்டதால், மருத்துவ ரீதியாக கர்ப்பத்தை கலைப்பது நல்ல தேர்வாக இருக்காது என்று கூறி, கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
"கரு ஏற்கனவே 34 வார கர்ப்பத்தை எட்டியுள்ளது, இப்போது முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளது, கருப்பைக்கு வெளியே அதன் வாழ்க்கைக்குத் தயாராகிறது. இந்த கட்டத்தில் கர்ப்பத்தை கலைப்பது சாத்தியமில்லை. வெளிப்படையாக, எனவே, குழந்தை பிறக்க அனுமதிக்கப்பட வேண்டும்,” என்று உயர் நீதிமன்றம் கூறியது.
இந்தியாவில் 312 பேருக்கு JN.1 வகை கொரோனா தொற்று உறுதி.. இந்த மாநிலத்தில் தான் அதிக பாதிப்பு..
12 வயது சிறுமியின் 34 வார கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்கக் கோரி அச்சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தை அணுகினர். இந்த கர்ப்பம் அச்சிறுமிக்கு உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர், மேலும் சமீப காலம் வரை கர்ப்பம் குறித்து தங்களுக்கு தெரியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரலில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் 12 வயது மைனர் சிறுமியின் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்க கல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்தது. கர்ப்பத்தை கலைப்பது தாய் மரணம் அடையும் அபாயத்தை உள்ளடக்கியது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.