இந்தியாவில் 312 பேருக்கு JN.1 வகை கொரோனா தொற்று உறுதி.. இந்த மாநிலத்தில் தான் அதிக பாதிப்பு..

இந்தியாவில் இதுவரை 312 பேருக்கு JN.1 மாறுபாடு இருப்பது கண்டறியப்படுட்ள்ளது. அவற்றில் சுமார் 47 சதவீதம் கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

India records 312 Covid sub-variant JN.1 cases, 47% in Kerala Rya

2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹான் மாகாணத்தில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இதனால் லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் இறந்தனர், மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. தடுப்பூசி உள்ளிட்ட காரணங்களால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. உலக நாடுகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.

எனினும் கொரோனா தொற்று பரவத்தொடங்கியதில் பலமுறை உருமாற்றம் அடைந்து புதிய வகை மாறுபாடாக உருவாகி வருகிறது. அதில் டெல்டா, ஒமிக்ரான் போன்றவை ஆபத்தான மாறுபாடுகளாக கருதப்படுகிறது. இந்த மாறுபாடுகளால் புதிய கொரோனா அலைகள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது JN.1 மாறுபாடு வேகமாகப் பரவி வருவதால், பல நாடுகளிலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா  அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதய நோயாளிகளே! இந்த அளவுக்கு மட்டும் தண்ணீர் குடிச்சா போதுமாம்..நிபுணர்களே சொல்லுறாங்க...

இந்தியாவில் இதுவரை 312 பேருக்கு JN.1 மாறுபாடு இருப்பது கண்டறியப்படுட்ள்ளது. அவற்றில் சுமார் 47 சதவீதம் கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்திய புதுப்பிப்பின்படி, இந்தியாவில் புதிதாக 573 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. இன்றுவரை, இந்தியாவில் உள்ள பத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த வைரஸின் துணை மாறுபாடு JN.1 இருப்பதைக் கண்டறிந்துள்ளன.

தென் மாநிலங்களில் கேரளாவில் அதிக பாதிப்பு பதிவாகி உள்ளது. அதன்படி கேரளாவில், 147 பேருக்கு JN.1பாதிப்பு உள்ளது. தமிழ்நாட்டில் 22 பேருக்கும் கர்நாடகா 8 பேருக்கும் இந்த மாறுபாடு இருப்பது உறுதியாகி உள்ளது. பிரபலமான சுற்றுலா தலமான கோவாவில் 51 பேருக்கும் , குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற அருகிலுள்ள மாநிலங்களில் முறையே 34 மற்றும் 26 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. டெல்லியில் 16 பேருக்கும், ராஜஸ்தானில் 5 பேருக்கும், தெலங்கானாவில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும்  JN.1 பாதிப்பு உறுதியாகி உள்ளன.

JN.1 மாறுபாடு புதிய சுகாதார கவலைகளை எழுப்பவில்லை என்றாலும், மாநிலங்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மாஸ்க் அணியும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மக்களே உஷார்! நின்று கொண்டு தண்ணீர் குடிச்சா 'இந்த' மாதிரி பிரச்சினைகள் வரும்.. ஜாக்கிரதை!

சில பகுதிகளில் கோவிட்-19 பாதிப்புகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் விநியோகம் மற்றும் கோவிட்-19 நோயாளிகளுக்கு பிரத்யேக படுக்கைகள் கிடைப்பதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

இதனிடையே JN.1 மாறுபாடு வேகமாக பரவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தாலும் , இது "குறைந்த" ஆபத்து கொண்ட மாறுபாடு என்றும் தெரிவித்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios