டெல்லி புராரி பகுதியில், சந்த் நகரில் 11 பேர் கடந்த ஜூலை 1 ஆம் தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டனர்.

நேரடியாக சொர்க்கத்தை அடைவதற்காக, பல ஆண்டுகளாக பல சடங்குகள் நடத்தி வந்து, பின்னர் அனைவரும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் தற்கொலை செய்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.

இதனை தொடர்ந்து, தற்கொலை செய்துக்கொண்ட பாட்டியா குடும்பம்  வசித்த வீட்டிற்கு பின்புறமாக வசித்து வரும் நபர் பவன் குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் திடீரென 11 பேரும் தற்கொலை செய்துக்கொண்டதால், அந்த பகுதியில் ஆவி சுற்றுகிறதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. மேலும் அருகில் வசிப்பவர்கள் அனைவரும் ஆவி பயத்துடன் மாலை நேரத்திலேயே வீட்டிற்குள் நுழைந்து விடுகிறார்களாம்.

அதுமட்டும் இல்லாமல், அந்த பகுதியில் வசிக்கும் நபர்கள் மற்றும் வாடகைக்கு குடி இருந்தவர்கள் அந்த இடத்தை காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு மாறி வருகிறார்களாம்.மேலும் இதே போன்று, அந்த இடத்தின் மதிப்பும் வெகுவாக குறைந்து விட்டதாம்...

அந்த பகுதியில் நிலத்தை வாங்க யாரும் முன்வருவதும் இல்லையாம்..இதனால் ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாம். அதே போன்று, ஆவி பயத்தில் பலருக்கும் உடல் நிலை கூட சரி இல்லாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக பவன்குமார் தெரிவித்து உள்ளதாக பிரபல நாளிதழில் வெளிவந்து உள்ளது.

மேலும் இந்த இடத்திற்கு யாராவது உறவினர்கள் வர நினைத்தாலும் கூட தயக்கம காட்டுவதாகவும், மேலும் அந்த பகுதிக்கு வர ஆட்டோ கால் டாக்சி என யாரும் அந்த இடத்திற்கு வர தயக்கம் காட்டி வருவதாகவும் பவன் குமார் தெரிவித்து உள்ளார்.