Asianet News TamilAsianet News Tamil

world health day: முழு ஆரோக்கியத்துடன் வாழ! வாரத்தில் 7 நாட்கள் இப்படி செய்தால், 100 ஆண்டுகள் வாழ்வது உறுதி.!

world health day: நமது வாழ்க்கை முறை, நம் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையது. அதனால் தான் நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தால் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.  

world health day 2023 tamil health tips for healthier and longer life
Author
First Published Apr 7, 2023, 11:06 AM IST | Last Updated Apr 7, 2023, 11:06 AM IST

Tamil health updates world health day 2023: சிலர் தங்களுடைய ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள். சிறு பிரச்னை வந்தாலும்... உடனே மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். ஆனால் சிலர் தங்களின் பிஸியான வாழ்க்கையில் உடல் நலனில் அக்கறை கொள்வதை நிறுத்தி விடுகிறார்கள். இவர்களுக்கு சில நேரங்களில் ஆபத்தான, மீளமுடியாத உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகிறது. எப்போதும் உடல்நலப் பிரச்சனை சிறியதாக இருக்கும்போது மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. 

நமது வாழ்க்கை முறை சிறப்பாக இருந்தால், நமது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இல்லையெனில் பல ஆபத்தான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. சில விஷயங்களை வாரத்தில் 7 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி, வலி, நோயின்றி நூறு ஆண்டுகள் வாழலாம் என்கின்றனர் நிபுணர்கள். இன்று (ஏப்.7) உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் உடல் நலத்தை பேணும் சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.  

அதிகாலையில் எழுவது! 

அதிகாலையில் எழுவது உடல் நலத்திற்கு நல்லது. ஏனென்றால் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனின் அளவு காலையில் அதிகமாக இருக்கும். சூரியன் உதிக்கும்போது அது படிப்படியாகக் குறைகிறது. அதனால்தான் நீங்கள் அதிகாலையில் எழுந்தால், உங்கள் உடலுக்கு ஏராளமான சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும். அதிகாலையில் எழுவது உங்களை சுறுசுறுப்பாக வைக்கும். 

உடற்பயிற்சி

நாள் முழுவதும் நன்கு செயல்பட உடலுக்கு போதுமான ஆற்றல் தேவை. அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி அல்லது யோகா செய்யுங்கள். ஏனெனில் அவை உங்களுடைய சகிப்புத்தன்மையை அதிகரிக்கும். நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். இது உங்களை மனரீதியாக ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாற்றும். அவை எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. மேலும், நோய்களின் அபாயத்தைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும்.

ஆரோக்கியமான காலை உணவு 

பலர் காலை உணவைத் தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை சாப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில், நீங்கள் காலை உணவைத் தவிர்ப்பது குணப்படுத்த முடியாத நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே காலையில் உடற்பயிற்சி செய்த பிறகு ஆரோக்கியமான காலை உணவை உண்ணுங்கள். இது நாள் முழுவதும் செயல்படத் தேவையான ஆற்றலைத் தருகிறது.

துரித உணவுகள் தவிர்! 

வெளியில் சாப்பிடும் துரித உணவு சுவையாக இருந்தாலும், அதிகமாக சாப்பிட வேண்டாம். இது உங்கள் எடையை அதிகரித்து பல நோய்களுக்கு ஆளாக்குகிறது. உங்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய்களை கட்டுக்குள் வைத்திருக்கவும், உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் எப்போதும் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுங்கள். 

இதையும் படிங்க: கேன்சர் வராமல் தடுக்கும் உணவுகளின் பட்டியல்.. இந்த 10 உணவுகள்! எத்தனை நோய் வந்தாலும் விரட்டும்..!!

இரவில் சீக்கிரம் சாப்பிடுங்கள்! 

இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதனால் அஜீரணம், தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக சாப்பிட்ட பிறகு தூங்கக் கூடாது. உறங்குவதற்கும் உணவு உண்பதற்கும் இடையில் சில மணிநேர இடைவெளி இருக்க வேண்டும். உணவு சரியாக ஜீரணமாக, சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் இடையே குறைந்தது 2-3 மணிநேரம் இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

நல்ல தூக்கம்!  

நீங்கள் அதிகாலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்ற நிலையில், தாமதமாக படுக்கைக்குச் செல்ல வேண்டாம். சீக்கிரம் படுக்கைக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு முழுமையான தளர்வை அளிக்கிறது. இது அதிக கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. ஆரோக்கியமான உடல், சிறந்த மனநிலைக்கு குறைந்தது 8 மணிநேர தூக்கம் தேவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

இந்த 7 பழக்கங்களை எப்போதும் பின்பற்றி வந்தால் மருந்து மாத்திரை என அலைய வேண்டாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உலக சுகாதார தின வாழ்த்துகள்! 

இதையும் படிங்க: பணத்தை மிச்சம் பண்ண முடியலயா? துளசி செடியை இந்த இடத்தில் வச்சு பாருங்க! வீட்டில் பணமழை தான்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios