பெண்கள்தான் ரத்த புற்றுநோயின் அறிகுறிகளை கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களைதான் அது அதிகமாக தாக்குகிறதாம்.

ரத்தப் புற்று நோய் ரத்த செல்களில் புற்று நோய் செல்கள் உருவாகி அவை இரு மடங்கு பெருகுவதால் உண்டாகிறது. எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் ரத்த செல்களில் மரபணு மாற்றம் உண்டாகி அவை புற்று நோய் செல்களாக மாறி இரட்டிப்பாகிறது. இதுவே ரத்தப் புற்று நோயாகும்.

அறிகுறிகள்:

** வெளிர் சருமம்:

ரத்த செல்களில் ஹீமோகுளோபினால் சிவப்பு நிறம் உண்டாகிறது. அசாதரண வளர்ச்சி கொண்ட புற்று செல்களுக்கு ஹீமோகுளோபின் அமைப்பு மாறுபடும். இதனால் வெளிர் நிறம் வரும்.

** உடல் சோர்வு :

தொடர்ச்சியாக வேலை செய்ய இயலாது. தலை சுற்றும். உடல் மிகவும் சோர்வடையும்.

** நோய்வாய்ப்படுதல் :

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமானது ரத்த செல்களான வெள்ளையணுக்கள். லுகீமியா நோயால் வெள்ளையணுக்கள் உற்பத்தியாகாது. இதனால் தொடர்ச்சியாக நோய் வாய்படுவார்கள்.

** மூச்சிரைப்பு :

மூச்சு சீராக இருக்காது. அடிக்கடி மூச்சிரைப்பு வரும். சுவாசிப்பதிலும் த்டங்கலிருக்கும். மூச்சுத் திணறல் உண்டானால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது அவசியம்.

** காயம் ஆறாமை :

உடலில் காயம் ஏற்பட்டால் அவை ஆறாமல் நீண்ட நாட்கள் ஆகியும் ஆறவில்லையென்றால் அது ரத்தப் புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

** பிற அறிகுறிகள் :

இரவில் தூங்கும்போது வியர்த்தல் தாள முடியாத மூட்டு வலி ஆகியவைகள், திடீரென உடல் எடை மிகவும் குறைதல் ஆகியவைகள் ரத்தப் புற்று நோயின் மற்ற அறிகுறிகளாகும்.