குளிர்காலத்தில் உங்களது நுரையீரலை எப்படி பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குளிர் காலம் வந்தாச்சு. நாள் முழுவதும் சில்லென்று காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. இந்த சீசனில் நம்முடைய நுரையீரல் பல விதங்களில் பாதிக்கப்படும். அதாவது அதிக குளிர்ச்சி மற்றும் வறட்சியான காற்று சுவாசப் பாதைகளை பாதிக்கும். இதனால் நுரையீரல் தசைகள் வீங்கி சுருங்கி மூச்சு திணறல், இருமல், மாரடைப்பு பகுதிகளில் இருக்கும் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதோடு இந்த சீசனில் சுவாச கோளாறு மட்டுமல்ல நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து, வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்படுவோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த குளிர்காலத்தில் உங்கள் நுரையீரலை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குளிர்காலத்தில் யாரெல்லாம் கவனத்துடன் இருக்க வேண்டும்?

மற்ற பருவங்களை விட குளிர்காலத்தில் தான் நாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான குளிர் உடலில் சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அதுவும் குறிப்பாக ஏற்கனவே உடலில் சில பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த சீசன் நிலைமையை இன்னும் மோசமாக்கும். அதிலும் கீழே குறிப்பிட்ட நபர்கள் குளிர்காலத்தில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

- புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்கள் -இதய நோய் உள்ளவர்கள் - சர்க்கரை நோயாளிகள் - குழந்தைகள் மற்றும் முதியவர்கள் - குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் - ஆஸ்துமா, மூக்கு குழாய் அலர்ஜி போன்ற நுரையீரல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள்

குளிர்காலத்தில் நுரையீரலை பாதுகாப்பது எப்படி?

- குளிர்காலத்தில் நுரையீரலை பாதுகாக்க முதலில் வீட்டுக்குள் காற்றின் தரத்தை மேம்படுத்துங்கள். இதற்கு நீங்கள் ஏர் பியூரிஃபையர் பயன்படுத்தலாம். இது காற்றில் இருக்கும் மாசுகளை 50% குறைத்து விடும்.

- அதுபோல வீட்டின் அறைகளில் கொஞ்சமாக காற்றோட்டமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் தூசுகள் ஒரே இடத்தில் தங்கும்.

- வீட்டில் பூட்டியிருக்கும் அறையில் சாம்பிராணி, ஊதுபத்தி, கொசுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

- அதுபோல குளிர்காலத்தில் ஸ்வட்டர் கம்பளி போன்றவற்றை பயன்படுத்துவதற்கு முன் முதலில் அவற்றை சுத்தம் செய்துவிட்டு பிறகு பயன்படுத்தவும். அப்படியே பயன்படுத்தினால் அதில் இருக்கும் தூசிகள், மாசுக்கள் அலர்ஜியை தூண்டும்.

குளிர்கால தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க வழிமுறைகள் :

- குளிர்காலத்தில் தொற்றுகள் ஏதும் ஏற்படுவதை தடுக்க குளிர்கால ஆடைகளை கண்டிப்பாக அணியுங்கள். முகம் கழுத்து காது ஆகியவற்றை மறைத்தபடி ஆடை அணியவும்.

- குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லது. ஆனால் அதற்கு ஏற்ப ஆடை அணியவும். இல்லையென்றால் உடற்பயிற்சியின் போது சுவாசப்பாதையில் எரிச்சல் ஏற்படும்.

மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் குளிர்காலத்தில் நுரையீரல் பாதுகாப்பாக இருக்கும்.