- Home
- Lifestyle
- Avoid Fruits in Winter : உயிர்ச்சத்து அதிகம் ஆனாலும் 'குளிர்காலத்துல' தவிர்க்க வேண்டிய 'பழங்கள்' தெரியாம கூட சாப்பிடாதீங்க!
Avoid Fruits in Winter : உயிர்ச்சத்து அதிகம் ஆனாலும் 'குளிர்காலத்துல' தவிர்க்க வேண்டிய 'பழங்கள்' தெரியாம கூட சாப்பிடாதீங்க!
குளிர்காலத்தில் சாப்பிடவே கூடாத பழங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Fruits To Avoid In Winter
குளிர்காலம் வந்தாலே கூடவே பல உடல்நல பிரச்சனைகளும் வந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படும் காலமும் இதுதான். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். பொதுவாக குளிர் காலத்தில் செரிமான அமைப்பு மெதுவாகும். இத்தகைய சூழ்நிலையில் சில பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மீறி சாப்பிட்டால் சளி, இருமல் வர வாய்ப்பு உள்ளன. மேலும் செரிமான அமைப்பும் பாதிக்கப்படும். எனவே குளிர்காலத்தில் எந்தெந்த பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
தர்பூசணி மற்றும் முலாம்பழம்
தர்பூசணி, முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலை குளிர்விக்கும். இதில் இருக்கும் நீர்ச்சத்தானது குளிர்காலத்தில் உடலின் வெப்பநிலையை குறைத்து விடும். அதுபோல உங்களது செரிமான அமைப்பு பலவீனமாக இருந்தால் குளிர்காலத்தில் இவற்றை சாப்பிட்டால் ஜீரணிக்க கடினமாக இருக்கும். மேலும் இவை சளி மற்றும் தொண்டை வெளியே அதிகரிக்கும்.
அன்னாச்சிப்பழம்
குளிர்காலத்தில் அன்னாச்சிப்பழம் சாப்பிட்டால் வாய்ப்புண், தொண்டைப்புண், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் இது அதிகமாக சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும்.
திராட்சை :
பெரும்பாலும் இது இருமல் மற்றும் சளியை ஏற்படுத்தும். மேலும் இதில் சர்க்கரை அதிகமாக இருக்கிறது. எனவே, குளிர்காலத்தில் திராட்சை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.
வாழைப்பழம்
குளிர்காலத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் சளி உற்பத்தியை அதிகரிக்கும். வாழைப்பழம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது.
குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் :
ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள், மாதுளை, கிவி போன்ற பழங்களை குளிர்காலத்தில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும் உடலுக்கு வெப்பத்தையும் அளிக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

