Turmeric Milk: மஞ்சள் கலந்த பாலை யாரெல்லாம் குடிக்க கூடாது! ஏன்?

மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பது மிகவும் நல்லது. ஆனால், சிலர் மட்டும் மஞ்சள் கலந்த பாலைக் குடிக்க கூடாது. அந்த ஒருசிலர் யாரென்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

Who should not drink Turmeric Milk! Why?

அனைவரும் விரும்பக்கூடிய பசும்பாலில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பலரும் டீ, காஃபி குடிப்பதற்கு மிக முக்கிய ஆதாரமாக விளங்குவது பால் தான். வெறும் பாலை குடிப்பதைக் காட்டிலும், மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பது மிகவும் நல்லது. ஆனால், சிலர் மட்டும் மஞ்சள் கலந்த பாலைக் குடிக்க கூடாது. அந்த ஒருசிலர் யாரென்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மஞ்சள் கலந்த பால்

மஞ்சள் கலந்த பாலில் புரதச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் பி போன்ற உடலுக்குத் தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. ஆனால், எல்லோருக்கும் மஞ்சள் கலந்த பால் ஏற்றதாக இருக்கும் என கூற முடியாது. ஒருசிலருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

யாரெல்லாம் மஞ்சள் பாலை குடிக்ககூடாது

சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் மஞ்சள் கலந்த பால் குடிப்பதை தவிர்த்து விட வேண்டும். மஞ்சளில் ஆக்சலேட் இருப்பதனால், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீவிரமடைந்து, மிகவும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Seaweed: கடற்பாசியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிடைக்கும் அற்புதப் பலன்கள்!

வயிற்றில் வாயு, வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற செரிமானப் பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட, மஞ்சள் கலந்த பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் மஞ்சள் கலந்த பாலை குடிப்பதால் செரிமானப் பிரச்சனைகள் அதிகரித்து விடும்.

மஞ்சள் கலந்த பாலை குடிப்பதால், உடலில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சும் சக்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக உடலில் உள்ள ஹீமோகுளோபினின் அளவு அதிகரிக்காமல் போ வாய்ப்புள்ளது. ஆகவே, இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள், மஞ்சள் கலந்த பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இரத்த சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும் நோயாளிகள், மஞ்சள் கலந்த பாலை குடிக்கவே கூடாது. ஏனென்றால் மஞ்சளில் இருக்கும் குர்குமின், இரத்த சர்க்கரையின் அளவை மேலும் குறைத்து விடும். ஆகவே, குறைந்த இரத்த சர்க்கரை உள்ள நோயாளிகளின் பிரச்சனை, இன்னும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios