தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

** தயிரில் முக்கியமான விட்டமின் சத்துகள், புரோட்டீன்கள், புரதச்சத்துகள், கால்சியம், ரிபோப்ளேவின் போன்ற அனைத்து விதமான ஆரோக்கிய சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

** தயிரில் உள்ள வேதிப்பொருட்கள் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

** தொடர்ச்சியான வயிற்றுபோக்கு ஏற்படும் போது, வெந்தயம் மற்றும் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கி, வயிற்றுபோக்கு நின்றுவிடும்.

** அல்சரின் அறிகுறியான அசிடிட்டி, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு கிண்ணம் தயிர் சாப்பிடுவது சிறந்த ஒரு தீர்வாகும்.

** சிலருக்கு மலக்குடல் மற்றும் மலம் கழித்த பின் எரிச்சல் போன்ற இது பிரச்சனைகளுக்கு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சிறந்த ஒரு தீர்வாக உள்ளது.

** தயிர் சாப்பிடுவதால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் கிடைக்கிறது. எனவே இதனால் தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.