Asianet News TamilAsianet News Tamil

மூலிகைப் பிரியர்கள் வெந்தயத்தை அதிகம் விரும்ப காரணம் என்ன?

what more-reason-herbal-aficionados-likes-fenugreek
Author
First Published Dec 30, 2016, 1:32 PM IST


வெந்தயம் பொதுவாக தெற்கு ஐரோப்பாவின் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் காணப்படுகிறது. தற்போது வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் இலைகள் மற்றும் விதைகள் இரண்டையும் நறுமண பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். வெந்தய விதை ஒரு ஊட்டச்சத்து பொருளாக பயன்படுகிறது.

பல சுகாதார நலன்கள் காரணமாக இந்த வெந்தயத்தை மூலிகை பிரியர்கள் அனைவரும் விரும்புகின்றனர்.

குடல் பிரச்சனைகள்:

இந்த இலை மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் அஜீரண சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரைப்பை பிரச்சினைகள் மற்றும் குடல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் வெந்தய இலை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வயிற்றுக்கடுப்பு மற்றும் வயிற்றுப்போக்கை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

வெந்தய இலைகளை எடுத்து நிழலில் காயவைத்து பொடிசெய்ய வேண்டும். பிறகு எலுமிச்சை சாறுடன் சேர்த்து 2 நிமிடங்கள் சூடுபடுத்தி பயன்படுத்த வேண்டும்.

கொழுப்பு:

வெந்தய இலை இரத்த கொழுப்பு அளவில் ஒரு நம்பமுடியாத வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பெருந்தமனியின் தடிமனைக்குறைக்க உதவுகிறது. இது நமது உடலில் உள்ள குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவற்றை குறைத்து உயர் அடர்த்தி கொழுப்புப்புரதத்தை அதிகரிக்கிறது.

இரவில் வெந்தைய இலைகளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்து இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.

நீரிழிவு நோய்:

வெந்தயம் சிகிச்சைமுறை இலவங்கப்பட்டை பண்புகளை ஒத்து உள்ளன. இந்த இலையில் நீரிழிவு நோயை எதிக்கும் ஆற்றல் உள்ளதால் இது நீரிழிவு நோயை கட்டுபடுத்துகிறது. குளூக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தும் திறன் இந்த இலையில் உள்ளது. இந்த வெந்தய இலை இரத்த குளுக்கோஸ் ஹோமியோஸ்டசிஸ்களை சமப்படுத்துகிறது. மற்றும் செல்லுலார் இன்சுலின் எதிர்ப்பை குறைக்கிறது. மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை குறைத்து இரண்டாம் நிலை நீரிழிவு நோயை பெருமளவு குறைக்கிறது.

இதயப் பிரச்சினைகள் மற்றும் ரத்தக் கொழுப்புகள்:

வெந்தயத்தில் மிகவும் வலுவான ஆண்டியாக்ஸிடண்ட்கள் உள்ளது. அதனால் உங்கள் இதயத்தில் திடீர் இரத்தம் உறைதல் வாய்ப்புகளை குறைக்கிறது. இது டெங்கு உருவாக்கத்தை குறைக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios