Bad Cholesterol: கெட்ட கொழுப்பை கரைக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?
உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை.
இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனை உடற்பருமன். உடல் எடை அதிகரித்து விட்டால், அதனை குறைக்க வேண்டும் என பலரும் பல விதங்களில் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், உடல் எடை கூடுவதற்கு முன்பாகவே, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டால், இந்த பிரச்சனையே வராது. இருப்பினும், பல விதமான உணவு வகைகளால் நாம் ஈர்க்கப்படுவதால், உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியாமல் போகிறது. உடற்பருமன் பிரச்னையை சரிசெய்வதற்கு, இன்று பலரும் பல வகைகளில் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், அந்த முயற்சிகளுக்கே உடனே பலன் கிடைக்குமா என்றால் கஷ்டம் தான். அதிலும், உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை.
கெட்ட கொழுப்புகள்
அன்றாடம் சில உணவுப் பொருட்களை நாம் அடிக்கடி சேர்த்துக் கொள்வதனால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க முடியும். இதன் காரணமாக உடல் எடை குறையும். உடற்பயிற்சிகளின் மூலம் கெட்ட கொழுப்புகளை குறைக்க முடியும். ஆனால், உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்கள், குறிப்பிட்ட சில உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் கெட்ட கொழுப்புகளை கரைத்து விட முடியும்.
கெட்ட கொழுப்பை கரைக்கும் உணவுகள்
பூண்டு மற்றும் வெங்காயம் ஆகிய இரண்டு பொருட்களிலும், கொழுப்பை கரைக்கும் வேதிப் பொருள்கள் உள்ளது. பெரும்பாலாக அனைத்து விதமான உணவுகளிலும் பூண்டு மற்றும் வெங்காயம் ஆகிய இரண்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பாதாம், வால்நட் மற்றும் வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளையும் அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் ஒமேகா 3 அமிலங்கள் உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
அடுத்து ஓட்ஸ், தினை மற்றும் பார்லி ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் இருக்கும் பீட்டா குளுகோன் கெட்ட கொழுப்புகளை அழிக்கும் திறன் பெற்றுவை.
பீன்ஸில் இருக்கும் நார்ச்சத்தும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையைக் கொண்டது. நார்ச்சத்து நிறைந்த பொருள்களை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்புகளை கரைத்து விடலாம்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் மற்றுமொரு முக்கியமான பொருள் கொள்ளு. இதனை கொள்ளு சட்னி மற்றும் துவையல் செய்தும் சாப்பிடலாம்.
Lizard in food: பல்லி விழுந்தால் உணவு விஷமாக மாறுமா? இதோ யாரும் அறிந்திராத தகவல்!
பசலைக் கீரையில் இருக்கும் லூடின் என்ற வேதிப் பொருள் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.
பெரிஸ் பழ வகைகளில் அதிக நார்ச்சத்து உள்ளதால், அவ்வப்போது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது உடல் எடை இழப்பிற்கு உதவும்.
உருளைக்கிழங்கில் மாவுச் சத்து இருந்தாலும், கெட்ட கொழுப்பைக் கரைக்கும் நார்ச்சத்தும் இருப்பதால், அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சுரைக்காய் மற்றும் புடலங்காய் ஆகிய இரண்டும் உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடலை எடையைக் குறைக்க உதவுகிறது.
இதுதவிர, உணவுகள் அல்லது தேநீரில் அடிக்கடி இஞ்சியை சேர்த்துக் கொள்வது உடல் எடை குறைப்புக்கு உதவும்.